கணியாமூர் கலவரம்: நால்வருக்கு 'குண்டாஸ்'

Added : ஆக 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கணியாமூர் பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட, 306 பேர் கைது செய்யப்பட்டனர்.கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் 'வீடியோ' காட்சி பதிவுகளை வைத்து, கலவரக்காரர்களை சிறப்பு புலனாய்வுக் குழு
கணியாமூர் கலவரம்: நால்வருக்கு 'குண்டாஸ்'

கள்ளக்குறிச்சி : கணியாமூர் பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட, 306 பேர் கைது செய்யப்பட்டனர்.கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் 'வீடியோ' காட்சி பதிவுகளை வைத்து, கலவரக்காரர்களை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்து வருகின்றனர். காவல் துறை பஸ்சுக்கு தீ வைத்த, சங்கராபுரம் அடுத்த புதுபல்லகச்சேரி முருகன் மகன் பரமேஸ்வரன், 23; கள்ளக்குறிச்சி, விளாந்தாங்கல் ரோடு, சந்திரசேகர் மகன் நிதீஷ், 19; கைது செய்யப்பட்டனர்.

மேலும், காவல் துறையின் 'சுமோ' வாகனத்திற்கு தீ வைத்த கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் தட்சிணாமூர்த்தி மகன் சஞ்சீவ், 22. மாடு திருடிய சின்னசேலம் முனியதுரை மகன் மாயி, 27, ஆகியோரும் கைது செய்யப்பட்டு, வேலுார் மற்றும் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நான்கு பேரும் வெளியே வந்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். எனவே, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பகலவன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி, கலெக்டர் ஷ்ரவன்குமார், நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ஏற்கனவே சிறையில் உள்ள நான்கு பேரிடமும் அதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஆக-202200:27:18 IST Report Abuse
சி சொர்ணரதி கலவரக்காரர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களை என்ன செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X