மிரட்டல் விடுக்கின்றனர் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., புகார்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
புதுச்சேரி-சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் எம்.எல்.ஏ., பிரகாஷ் குமார் (சுயேச்சை) பேசியதாவது:முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பத்தில் சட்டவிரோதமாக ஒரு கெஸ்ட் ஹவுஸ் நடக்கிறது. அங்கு, வாய்ஸ் ரெக்கார்டிங்கோடு கூடிய கேமரா பொருத்தி அருகே உள்ள வீடுகளை கண்காணிக்கின்றனர். இதில், ஒரு வீட்டு பாத்ரூமை நோக்கி கேமரா உள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.இதனால் கேமரா மானிட்டரை பார்க்க



புதுச்சேரி-சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் எம்.எல்.ஏ., பிரகாஷ் குமார் (சுயேச்சை) பேசியதாவது:முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பத்தில் சட்டவிரோதமாக ஒரு கெஸ்ட் ஹவுஸ் நடக்கிறது. அங்கு, வாய்ஸ் ரெக்கார்டிங்கோடு கூடிய கேமரா பொருத்தி அருகே உள்ள வீடுகளை கண்காணிக்கின்றனர். இதில், ஒரு வீட்டு பாத்ரூமை நோக்கி கேமரா உள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.இதனால் கேமரா மானிட்டரை பார்க்க முயன்ற போது, அவர்கள் அனுமதி மறுத்தனர். இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை.விடுதியில் குடிநீர், மின்சாரம் வீட்டு பயன்பாடு அளவில் வாங்கி வைத்துள்ளனர். அந்த விடுதிக்கு சீல் வைக்க வேண்டும். நகர குழும விதிகள் மீறி 4 மாடி கட்டியுள்ளனர். இது பற்றி கேள்வி கேட்டால் என்னை மிரட்டுகின்றனர். விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓட்டலுக்கு 'சீல்'

பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஜீரோ நேரத்தில் பேசுகையில், முத்தியால்பேட்டை தொகுதியில், காட்டாமணிகுப்பம் வீதியில், அரசின் விதிகளை மீறி, 'பாரிஸ் வில்லா அபார்ட் ஓட்டல்' இயங்கி வருவதாக புகார் கூறினார்.அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் நேற்று மாலை 3:30 மணிக்கு சம்பந்தப்பட்ட ஓட்டலை பூட்டி 'சீல்' வைத்தனர்.இதனை, மாலை 5:00 மணிக்கு சட்டசபையில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்து, புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X