உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசு: விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு குற்றச்சாட்டு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
சிவகங்கை : ''பெரியாறு அணை நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவை தமிழக அரசு மதிக்கவே இல்லை,'' என, சிவகங்கையில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.,பாண்டியன் குற்றம்சாட்டினார்.அவர் கூறியதாவது: மூன்று மாதங்களுக்கு முன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் பெரியாறு அணை நீர் பங்கீடு தொடர்பான வழிகாட்டுதலை பின்பற்ற

சிவகங்கை : ''பெரியாறு அணை நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவை தமிழக அரசு மதிக்கவே இல்லை,'' என, சிவகங்கையில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.,பாண்டியன் குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது: மூன்று மாதங்களுக்கு முன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் பெரியாறு அணை நீர் பங்கீடு தொடர்பான வழிகாட்டுதலை பின்பற்ற கூறியது. அணையில் 142 அடி நீரை தேக்குவதுடன் கொள்ளளவை 152 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்தவும் கேரளாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு பொறியாளர் குழுவிற்கு முழு அதிகாரம் அளித்துள்ளது.

ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.'ரூல்கர்வ்'முறையில் இரண்டு ஆண்டுகளாக 142 அடி நீரை தேக்கவிடாமல் செய்யும் கேரளாவின் சதிக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது. வைகை பாசன பகுதியில் பல்வேறு முரண்பாடு ஏற்படுகிறது. ரூல்கர்வ் முறையை காரணமாக கூறி அணையில் நீரை தேக்க மறுப்பதால் பாசனத்திற்கான உரிய அளவீடு நீரை பெறுவதில் பின்னடைவு ஏற்படுகிறது.


வைகையை துார்வார வேண்டும்


வைகை அணையை துார்வாராததால் முழு கொள்ளளவு நீரை தேக்க முடியாமல் 2 டி.எம்.சி., நீரை பகிர்ந்து அளிக்க முடியவில்லை. அணையை துார்வார வேண்டும். கலெக்டர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து அணைகளில் இருந்து உரிய நீரை பகிர்ந்தளிக்க வேண்டும். விவசாயிகள் கருத்தை பெறாமல் மணல் குவாரிக்கு அனுமதி தரக்கூடாது.


நீர்பாசன திட்ட குழு கலைப்பு


அ.தி.மு.க., ஆட்சியின் போது கேரளாவுடன், புதிய நீர்பாசன திட்டம் குறித்து ஆலோசிக்க இரு மாநில அதிகாரிகள் குழு அமைத்ததை தி.மு.க., அரசு கலைத்து விட்டது. காவிரியுடன் கோதாவரியை இணைக்க அக்கறை செலுத்தும் அரசு, காவிரியுடன் வைகை, குண்டாறு ஆறுகளை இணைக்க அக்கறை செலுத்தி, மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும்.


தேர்தல் வாக்குறுதி என்னாச்சு


தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 தருவதாக கூறியது. எட்டு வழி சாலை திட்டத்தை கைவிடுவோம் என்றனர். ஆனால் இன்றைக்கு முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X