பழங்குடியின மக்களுக்கு வீடு எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
புதுச்சேரி-'பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டா, வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறினார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:செந்தில்குமார் (தி.மு.க): பாகூர் தொகுதி இருளன்சந்தை கிராமத்தில் உள்ள இருளர் இன மக்களின் குடிசைகள், கடந்த ஆண்டு பெய்த கன மழை மற்றும் ஆற்று வெள்ளத்தினால் நீரில் முழ்கின. ஒரு மாத காலம் இருளர் இன மக்கள்



புதுச்சேரி-'பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டா, வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறினார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:செந்தில்குமார் (தி.மு.க): பாகூர் தொகுதி இருளன்சந்தை கிராமத்தில் உள்ள இருளர் இன மக்களின் குடிசைகள், கடந்த ஆண்டு பெய்த கன மழை மற்றும் ஆற்று வெள்ளத்தினால் நீரில் முழ்கின. ஒரு மாத காலம் இருளர் இன மக்கள் அரசு இடத்தில் தங்க வைக்கப்பட்டதை அரசு அறியுமா? ஆம் எனில் அம்மக்களுக்கு மனைப்பட்டா அல்லது தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசு முன்வருமா?அமைச்சர் சந்திர பிரியங்கா: இருளன்சந்தை வருவாய் கிராமத்தில் புறம்போக்கு அல்லது தனியார் நிலங்கள் பற்றிய தகவலை துணை கலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.செந்தில்குமார்: ஓராண்டாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் சுணக்கமாக பணிகள் நடக்கிறது. அவசர பணியாக எடுத்து செய்து தர வேண்டும். இவ்விஷயத்தில் நிதி நிலைமை என்பது ஏற்புடையதல்ல. அம்மக்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவீதம் தான் செலவு செய்கிறோம். விளிம்பு நிலை மக்களுக்கு உடனடியாக செய்ய வேண்டும்.கல்யாணசுந்தரம் (பா.ஜ.): பிள்ளைச்சாவடியில் 24 பழங்குடியின குடும்பத்தினர், கருவடிக்குப்பத்தில் 48 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச பட்டா, வீடு வழங்க வேண்டும். நிதியில்லை என்று கூறக் கூடாது. எதிர்க்கட்சித்தலைவர் சிவா: வில்லியனூர் தொகுதியிலும் ஒதியம்பட்டு, கூடப்பாக்கம் பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடு, மனைப் பட்டா வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டாக பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு மஞ்சள் ரேஷன் கார்டு வழங்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்காளன் (சுயேச்சை): என் தொகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு மனைப்பட்டா இல்லை. அதிகாரிகள் நிலம் இல்லை என்கின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகில் வசிக்கும் இலங்கை அகதிகள் 50 குடும்பத்தினருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். தாழ்த்தப் பட்டோர் சிறப்புக்கூறு நிதியை அந்த திட்டங்களுக்கு மட்டும் செலவிட்டால் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். நிதியை மாற்றம் செய்வதால்தான் சிக்கல் ஏற்படுகிறது.ஆறுமுகம் (என்.ஆர்.காங்.): பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது வழங்கப்பட்டு வந்த துணிக்கு பதில் பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அதை குடும்பத் தலைவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். எனவே மீண்டும் துணியாக வழங்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி: பழங்குடியின மக்கள் மீது அரசுக்கு அக்கறை உள்ளது. அவர்களுக்கு பட்டா, வீடு வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அவர்கள் வசிக்கும் இடத்திலேயே பட்டா, வீடு கேட்கின்றனர். மாற்று இடத்தில் அளித்தால் செல்ல மறுக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நிலத்தை கண்டறிந்து கொடுத்தாலோ, அரசு புறம்போக்கு நிலத்தை சுட்டிக்காட்டினால் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கப்படும், வீடுகளும் கட்டித்தரப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X