சுப்ரீம் கோர்ட் வழக்குகள்; பட்டியலிட புதிய நடைமுறை

Added : ஆக 30, 2022 | |
Advertisement
@subboxhd@புதிய நடைமுறை@@subboxhd@@உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த என்.வி.ரமணாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் சமீபத்தில் பொறுப்பேற்றார். வரும் நவ., 8ல் இவருக்கு 65 வயது பூர்த்தி அடைவதை அடுத்து, 74 நாட்கள் மட்டுமே இவர் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார். அதன் பின் பணி ஓய்வு பெறுகிறார்.இந்நிலையில், புதிய
Court,Supreme Court,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்



புதிய நடைமுறை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த என்.வி.ரமணாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் சமீபத்தில் பொறுப்பேற்றார். வரும் நவ., 8ல் இவருக்கு 65 வயது பூர்த்தி அடைவதை அடுத்து, 74 நாட்கள் மட்டுமே இவர் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார். அதன் பின் பணி ஓய்வு பெறுகிறார்.இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் தன் பணிகளை நேற்று துவக்கினார். உச்ச நீதிமன்றத்தில் 60 பொதுநல மனுக்கள் உட்பட, 900 மனுக்கள் நேற்று பட்டியலிடப்பட்டன. நீதிபதி ரவீந்திர பட் உடன் இணைந்து, 62 மனுக்களை தலைமை நீதிபதி லலித் நேற்று விசாரித்தார். அப்போது, ''மனுக்களை அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டாம். நீதிமன்ற பதிவரை அணுகி, வழக்கை பட்டியலிடுவது குறித்து கோரிக்கை வைக்கும் நடைமுறை, செப்., 1 முதல் நடைமுறைக்கு வரும்,'' என லலித் தெரிவித்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X