கடந்த மாதம் இறந்த நபர்அடையாளம் தெரிந்தது| Dinamalar

கடந்த மாதம் இறந்த நபர்அடையாளம் தெரிந்தது

Added : ஆக 30, 2022 | |
கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அடுத்த கனியாமூர் பகுதியில் கடந்த ஜூலை 24ம் தேதி தலையில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மயங்கிக் கிடந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர், இறந்தார்.கனியாமூர் வி.ஏ.ஓ., கொடுத்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த திருவாலந்துரை முத்துசாமி மகன்



கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அடுத்த கனியாமூர் பகுதியில் கடந்த ஜூலை 24ம் தேதி தலையில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மயங்கிக் கிடந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர், இறந்தார்.கனியாமூர் வி.ஏ.ஓ., கொடுத்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த திருவாலந்துரை முத்துசாமி மகன் ரமேஷ், 39; என்பது தெரிந்தது. கடந்த ஜூலை 21ம் தேதி இரவு யமாகா பைக்கில் சென்ற ரமேஷ் ஈய்யனுார் பஸ் நிறுத்தம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சிகிச்சை பெறும்போதே மருத்துவமனையிலிருந்து வெளியேறி கனியாமூர் பகுதியில் சுற்றித் திரிந்து, மயங்கி விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் மாமனார் கண்ணதாசன், வாகன விபத்தில் ஏற்பட்ட பாதிப்பால் ரமேஷ் இறந்ததாக அளித்த புகாரின் பேரில், நேற்று வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X