கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று 10.58 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சோளம் 350 மூட்டைகள், வேர்க்கடலை 27, எள் 3, கம்பு 2, ராகி, கொள்ளு, தேங்காய் பருப்பு, சிவப்பு சோளம் தலா ஒரு மூட்டை என 60 விவசாயிகள் 386 மூட்டை விளை பொருட்களைக் கொண்டு வந்தனர்.சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,300 ரூபாய், வேர்க்கடலை 7,629, எள் 8,863, கம்பு 3,249, ராகி 1,599, கொள்ளு 3,099, தேங்காய் பருப்பு 5,595, சிவப்பு சோளம் 3,699 ரூபாய் என மொத்தமாக 10 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 44 மூட்டை மக்காச்சோளம், 5 மூட்டை கம்பு, ஒரு மூட்டை தேங்காய் பருப்பு நேற்று கொண்டு வரப்பட்டன.சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,446 ரூபாய், கம்பு 2,411, தேங்காய் பருப்பு 5,549 ரூபாய்க்கு விலை போனது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு 5 விவசாயிகள் கொண்டு வந்த 570 மூட்டை விவசாய விளைபொருட்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.