அமிதாப்புக்கு அமெரிக்காவில் வீட்டு வாசலில் உருவச்சிலை

Added : ஆக 30, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று, தன் வீட்டு வாசலில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை நிறுவியுள்ளது.அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் கோபி சேத். குஜராத்தைச் சேர்ந்த இவர், 1990ல் அமெரிக்காவில் குடியேறினார். இன்ஜினியரான சேத், அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர். அவருக்காக, 'பிக் பி எக்ஸ்டெண்டட் பேமிலி' என்ற
அமெரிக்கா, அமிதாப் பச்சன்,  அமிதாப் பச்சன் சிலை, America, Amitabh Bachchan, Amitabh Bachchan Statue,Amitabh Bachchan silai,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று, தன் வீட்டு வாசலில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை நிறுவியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் கோபி சேத். குஜராத்தைச் சேர்ந்த இவர், 1990ல் அமெரிக்காவில் குடியேறினார். இன்ஜினியரான சேத், அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர். அவருக்காக, 'பிக் பி எக்ஸ்டெண்டட் பேமிலி' என்ற இணையதளத்தை, கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் தன் வீட்டு வாசலில், அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சிலை, 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், அமிதாப்பச்சன் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து, கோபி சேத் கூறியதாவது:அமிதாப், எனக்கும் என் மனைவிக்கும் கடவுளைப் போன்றவர். சினிமாவில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும் அவர் மிகப் பெரிய ஸ்டார்.தன் ரசிகர்கள் மற்றும் அனைவருடனும் மிக எளிமையாக பழகுபவர். தன்னுடைய வாழ்க்கை வாயிலாக, பலருக்கும் உத்வேகம் அளிக்கிறார். இதனால், அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதை நிறைவேற்றி உள்ளேன்.

இந்த சிலை ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, மொத்தமாக 60 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. நான் வீட்டு வாசலில் சிலை வைப்பது, அமிதாப்புக்கு தெரியும். ஆனால், 'நான் இதற்கு தகுதியானவன் அல்ல' என, அவர் பணிவுடன் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஆக-202206:29:10 IST Report Abuse
அப்புசாமி அமெரிக்கா போனாலும் அரைப்பைத்தியம் தெளியுமோ?
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
30-ஆக-202219:01:06 IST Report Abuse
அன்பு அமிதாபை ஒரு செக்யூரிட்டி கார்டாக மாற்றிவிட்டார்.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
30-ஆக-202218:59:13 IST Report Abuse
MARUTHU PANDIAR பைத்தியக் காரன் என்று தான் இந்த ஆளை பற்றி கூற முடியும்++++++இந்த லட்சணத்தில் இந்த ஆளு ஒரு எஞ்சினீயர் என்றால் நம்ப முடிய வில்லை++++நிழலுக்கும் நிஜத்துக்கும் வேறு பாடு தெரியாத அறிவுக் குறைபாடு++++++தமிழ் நாட்டின் விசிலடிச்சான் குஞ்சுகளை வீழ்த்திய சினிமா வெறி++++++++ஈ ஒரு டிரஸ்ட் ஏற்படுத்த அந்த வருமானத்தில் தனது சொந்த நாட்டிலுள்ள ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துக்கோ அல்லது அநாதை இல்லத்துக்கோ வருமானத்தை அளிக்கும் அளவுக்கு மூளை வேலை செய்யலை பாவம்+++++கை கொட்டி சிரிக்க வேண்டிய விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X