பிரான்ஸ் தமிழர் அமைப்பு சபாநாயகருக்கு வரவேற்பு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
சென்னை : பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர் அமைப்பு சார்பில், சபாநாயகர் அப்பாவுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.கனடாவின் ஹாலிபாக்ஸ் நகரில் நடந்த, 65வது காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாட்டில் பங்கேற்பதற்காக, சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் சென்றுள்ளனர்.இப்பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சேக்ரமெண்டோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ



சென்னை : பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர் அமைப்பு சார்பில், சபாநாயகர் அப்பாவுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கனடாவின் ஹாலிபாக்ஸ் நகரில் நடந்த, 65வது காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாட்டில் பங்கேற்பதற்காக, சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் சென்றுள்ளனர்.இப்பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சேக்ரமெண்டோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கும் இருவரும் சென்றனர். அங்குள்ள வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில், சிலிகான் ஆந்திரா பல்கலை வளாகத்தில், இந்திய துாதர் நாகேந்திர பிரசாத் தலைமையில், சபாநாயகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 25ம் தேதி, 65வது காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார். பின், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள, திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற தமிழர் அமைப்பு சார்பில், சபாநாயகர் அப்பாவிற்கு, 27ம் தேதி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய துாதரக செயலர் குல்தீப் சிங் நேகி, பிரான்ஸ் தமிழ் சங்க தலைவர் தசரதனே, பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அண்ணாமலே பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X