செப்.,1 முதல் சுங்க கட்டணம் உயர்வு பார்சல், கூரியர் கட்டணம் அதிகரிப்பு| Dinamalar

செப்.,1 முதல் சுங்க கட்டணம் உயர்வு பார்சல், கூரியர் கட்டணம் அதிகரிப்பு

Added : ஆக 30, 2022 | |
சேலம் : தமிழகத்தில் செப்., 1 முதல் சுங்க கட்டணம் உயர உள்ள நிலையில், பிரபல நிறுவனங்கள் பார்சல், கூரியர் கட்டணங்களை, 30 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன.தமிழகத்தின் முக்கிய நகரங்கள், வெளி மாநிலங்களுக்கு இடையே பார்சல், கூரியர் சப்ளையில், 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.செப்.,1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. இக்கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல்
சுங்க கட்டணம் உயர்வு,  பார்சல் கட்டணம் உயர்வு, கூரியர் கட்டணம் உயர்வு, Toll price hike,parcel charges hike, courier charges hike,



சேலம் : தமிழகத்தில் செப்., 1 முதல் சுங்க கட்டணம் உயர உள்ள நிலையில், பிரபல நிறுவனங்கள் பார்சல், கூரியர் கட்டணங்களை, 30 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன.



தமிழகத்தின் முக்கிய நகரங்கள், வெளி மாநிலங்களுக்கு இடையே பார்சல், கூரியர் சப்ளையில், 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.செப்.,1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. இக்கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் நிதி சுமையை சமாளிக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல் பார்சல் கட்டணத்தை அந்த நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.


இதில், 10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம், 400 கி.மீ., வரை, 150 ரூபாயாக இருந்தது 170 ரூபாய்; 600 கி.மீ., வரை, 170 ரூபாயாக இருந்தது, 200 ரூபாயாகவும் அதிகரிப்பட்டுள்ளது.இந்த எடைக்கு மேல், 100 கிலோ வரை, 50 ரூபாய் முதல், 150 வரை; 100 கிலோவுக்கு, மேல், 1 டன் வரை, 300 ரூபாய் முதல், துாரத்தின் அடிப்படையில், 800 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


கூரியர் நிறுவனங்கள் உள்ளூர் கவருக்கு, 10 ரூபாய், வெளியூர் பார்சலுக்கு, 15 ரூபாய், வெளி மாநில பார்சலுக்கு, 30 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது. எடைக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரிப்பு செய்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X