கோடிகள் கொட்டி உருவானது ஸ்மார்ட் சிட்டி: மழை பெய்தால்தான் தெரியுது அதன் பியூட்டி!

Updated : ஆக 30, 2022 | Added : ஆக 30, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
கோவை: கோவை நகரில் நேற்று ஒன்றரை மணி நேரம் பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீரும், சாக்கடை கழிவும் தேங்கியது. வாகனப்போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வேலை முடிந்து வீடு திரும்பிய பொதுமக்கள், கடும் அவதிக்குள்ளாயினர்.கோவையில் நேற்று முன்தினம் இரவு, கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழை நேற்று காலை ஓய்ந்தது. நேற்று மாலை 3:00 மணிக்கு, மீண்டும்

கோவை: கோவை நகரில் நேற்று ஒன்றரை மணி நேரம் பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீரும், சாக்கடை கழிவும் தேங்கியது. வாகனப்போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வேலை முடிந்து வீடு திரும்பிய பொதுமக்கள், கடும் அவதிக்குள்ளாயினர்.

கோவையில் நேற்று முன்தினம் இரவு, கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழை நேற்று காலை ஓய்ந்தது. நேற்று மாலை 3:00 மணிக்கு, மீண்டும் விஸ்வரூபமெடுத்து, மாலை 4:30 மணி வரை கொட்டித்தீர்த்தது. நகரில் தாழ்வான இடங்கள், மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில், மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



latest tamil news




கோவை நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள, வணிக நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. பொன்னையராஜபுரம் அருகே உள்ள, முத்தண்ணன் குளத்திலிருந்து செல்வசிந்தாமணி குளத்திற்கு செல்லும் மழைநீர் கால்வாயிலிருந்து வெள்ளம் வெளியேறி, பிருந்தாவன் காலனியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது.

புலியகுளம் மசால் லேஅவுட்டிலுள்ள, குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் நுழைந்தது. அதே போல் திருச்சி சாலை சுங்கம் அருகேயுள்ள, தாழ்வான பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வடிவமைக்கப்பட்ட ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா, வாலாங்குளம், பெரியகுளம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் அவதிக்குள்ளாயினர். பல கோடி ரூபாய் செலவழித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், மழைநீர் வடிந்து செல்வதற்கான வழிமுறைகளை, சரியாக செய்யாததால் ஒவ்வொரு மழையிலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-செப்-202206:18:10 IST Report Abuse
D.Ambujavalli அதிகாரிகள் . அமைச்சர் எல்லாரும் 'சுருட்டுவதில் ' தான் ஸ்மார்ட்டாக இருந்திருக்கிறார்கள் அடுத்த ஸ்மார்ட் ஆட்சி தன்பங்குக்கு அள்ளிக்கொண்டு போகும்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
30-ஆக-202219:48:08 IST Report Abuse
madhavan rajan கோடிகள் கொட்டியது உண்மைதான். ஆனால் அதில் பாதிக்கு மேல் அரசியல்வாதிகள் பைகளில் கொட்டி இருக்கும். மீதிக்கு இவ்வளவுதான் முடியும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-ஆக-202216:50:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ,,,,..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X