விவசாயிகள் பிரதமர் கிசான் திட்ட பதிவுக்கு நாளை கடைசி

Added : ஆக 30, 2022 | |
Advertisement
முதுகுளத்தூர் : பிரதமர் கிசான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய நாளை (ஆக.31) கடைசி நாள் என்று முதுகுளத்துார் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் கூறினார். அவர் கூறியிருப்பது:விவசாயிகள் இடுபொருட்கள் வாங்குவதற்காக 2019 முதல் பி.எம்.கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் நான்கு மாதங்களுக்கு

முதுகுளத்தூர் : பிரதமர் கிசான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய நாளை (ஆக.31) கடைசி நாள் என்று முதுகுளத்துார் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் கூறினார்.

அவர் கூறியிருப்பது:விவசாயிகள் இடுபொருட்கள் வாங்குவதற்காக 2019 முதல் பி.எம்.கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 விதம் ஆண்டிற்கு ரூ.6000 விவசாயிகள் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் நடப்பு 12வது தவணை தொகை பெறுவதற்கு அரசு சில வழிமுறைகள் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைத்து அத்துடன் நில உரிமை பட்டா, வங்கி கணக்கு விபரங்களை பி.எம். கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.நாளை(ஆக.31) கடைசி நாள் என்பதால் விவசாயிகள் அனைவரும் ஆவணங்கள் பதிவேற்றம் செய்து பயன்பெற வேண்டும். வேளாண்மை துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது, என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X