பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சாலைகள் வழியாக வர்த்தகத்தை பெருக்க கிராமங்களை, தேசிய,மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்க பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.2020 -- 2021ம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்டத்தில் 125 கி.மீ., துாரத்திற்கு தரமான தார் ரோடு போடுவதற்காக மத்திய அரசு ரூ.77.5 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் அனைத்து ஊராட்சி

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சாலைகள் வழியாக வர்த்தகத்தை பெருக்க கிராமங்களை, தேசிய,மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்க பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

2020 -- 2021ம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்டத்தில் 125 கி.மீ., துாரத்திற்கு தரமான தார் ரோடு போடுவதற்காக மத்திய அரசு ரூ.77.5 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய சாலைகளுடன் இணையும் கிராமங்களை தேர்வு செய்து அங்கு புதிய தார் ரோடுகள் போடப்படும்.


மத்திய அரசு கண்காணிக்கும்


மானாமதுரை, தேவகோட்டை, கண்ணங்குடி, சிங்கம்புணரி, காளையார்கோவில், சாக்கோட்டை, இளையான்குடி உள்ளிட்ட ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 25 இடங்களில் குறைந்தது 4.5 முதல் அதிகபட்சம் 6.5 கி.மீ., துாரம் வீதம் ஒட்டு மொத்தமாக இந்நிதியில் 125 கி.மீ., துாரத்திற்கு ரோடுகள் போடப்படும். இப்பணி தரமாக நடக்கிறதா என மத்திய கிராம சாலை மேம்பாட்டு குழு கண்காணிக்கும்.


மத்திய அரசு 80 சதவீதம் ஒதுக்கீடு


ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறியதாவது: இப்பணிக்கான டெண்டர் விடும் பணி சென்னையில் நடந்துள்ளது. பணிகள் தரமாக நடக்கிறதா என சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் கண்காணிப்பர். இதற்காக மத்திய அரசு 80, மாநில அரசு 20 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்கிறது, என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X