கொப்பரை கொள்முதல் செப்., 30 வரை நீட்டிப்பு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
சென்னை : அரசின் கொப்பரை தேங்காய் கொள்முதல் அடுத்த மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு:தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், பந்து கொப்பரை, அரவை கொப்பரைகளை, குறைந்தபட்ச ஆதரவு விலையில், தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது.நடப்பாண்டில்,



சென்னை : அரசின் கொப்பரை தேங்காய் கொள்முதல் அடுத்த மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், பந்து கொப்பரை, அரவை கொப்பரைகளை, குறைந்தபட்ச ஆதரவு விலையில், தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது.நடப்பாண்டில், பிப்., 1 முதல் ஜூலை 31 வரை, 21 மாவட்டங்களில், 12 ஆயிரத்து 300 விவசாயிகளிடம் இருந்து, 14 ஆயிரத்து 800 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.விலை ஆதரவு திட்டத்தின் கீழ், ஆறு மாதங்களுக்கு மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இதனால், ஜூலை மாதத்திற்கு பின், வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை கணிசமாக குறைந்துள்ளது.
விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதால், கொப்பரை கொள்முதல் அவகாசத்தை நீட்டிக்கும்படி, மத்திய அரசிற்கு, தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று, கொப்பரை கொள்முதலை அடுத்த மாதம், 30ம் தேதி வரை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, 21 மாவட்டங்களில் உள்ள, 46 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், கொப்பரை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X