விருதுநகர் மாவட்டத்தில் மழை

Added : ஆக 30, 2022 | |
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.காலை முதல் வெப்பச்சலன வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர். மதியத்திற்கு மேல் அவ்வப்போது மேகங்கள் வந்து சென்றன.இந்நிலையில் விருதுநகரில் மதியம் 2:15 மணி முதல் 2:45 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரையும் மிதமான மழை பெய்தது.இதே போல் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டத்தில் மழை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.காலை முதல் வெப்பச்சலன வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர். மதியத்திற்கு மேல் அவ்வப்போது மேகங்கள் வந்து சென்றன.

இந்நிலையில் விருதுநகரில் மதியம் 2:15 மணி முதல் 2:45 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரையும் மிதமான மழை பெய்தது.இதே போல் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதகளிலும் பரவலாக மழை பெய்தது. அருப்புக்கோட்டை, நரிக்குடி, சிவகாசி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக ஸ்ரீவில்லிபுத்துாரில் 16.8 மி.மீ., வரை மழை பெய்தது.



சிவகாசியில் மழை


சிவகாசியில் அரை மணி நேரம் பெய்த மழைக்கே தண்ணீர் ரோட்டில் ஓடியதால் மக்கள் அவதிப்பட்டனர். சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் காலையிலிருந்து நல்ல வெயில் கொளுத்தியது. மதியம் 3:00மணிக்கு மேல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் 3:30 மணிக்கு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X