போலீஸ் செய்திகள்| Dinamalar

போலீஸ் செய்திகள்

Added : ஆக 30, 2022 | |
மனைவி, மாமியாருக்கு அடிசிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் முருகையா புரத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி 24. இவரது கணவர் பாண்டியராஜன் 29. மனைவி மீது சந்தேகப் பட்ட பாண்டியராஜன் நாகலட்சுமியையும், இவரது தாயாரையும் அடித்து ,கொலை மிரட்டல் விடுத்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.பீர் பாட்டில் அடிசிவகாசி: கீழ திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பெரியார் காலனி சேர்ந்தவர் சத்யபாமா 30.

மனைவி, மாமியாருக்கு அடி

சிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் முருகையா புரத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி 24. இவரது கணவர் பாண்டியராஜன் 29. மனைவி மீது சந்தேகப் பட்ட பாண்டியராஜன் நாகலட்சுமியையும், இவரது தாயாரையும் அடித்து ,கொலை மிரட்டல் விடுத்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.பீர் பாட்டில் அடிசிவகாசி: கீழ திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பெரியார் காலனி சேர்ந்தவர் சத்யபாமா 30. இவர் அப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி 25, அழகுராஜா ஆகியோர் பொருள் வாங்கி பணம் தர மறுத்து, சத்யபாமாவை தகாத வார்த்தை பேசி அவரது கணவர் முரளிதரனை பீர் பாட்டிலால் அடித்தனர். தடுக்க வந்த ஐயப்பன், அஜித் ஆகியோரை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.தடை புகையிலை பறிமுதல்


சிவகாசி: விஸ்வநத்தம் காக்கா காலனியில் தடை புகையிலை விற்பனை செய்த குருசாமி 55, முதலிப்பட்டி கிழக்குத் தெரு சங்கரவேல் 57, புதுக்கோட்டை வடக்கு தெரு சங்கரமூர்த்தி 67 , ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மனைவி மாயம்சாத்துார்: சாத்துார் ஒத்தையாலை சேர்ந்தவர் ராஜபாண்டி ,29. இவர் மனைவி முனிஸ்வரி ஆகஸ்ட் 28 காலையில் வெளியில் சென்று வருவதாக கூறியவர் மாயமானார். சாத்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபருக்கு கத்திகுத்துசாத்துார்: சாத்துார் தாயில்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு, 25. அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் காவிய லட்சுமியை காதலித்து மணந்து கொண்டார். இதனால் ஏற்பட்ட முன்பகையில் ஆக.28ல் டி.கோட்டையூர் மகேஷ், வெள்ளைச்சாமி , அடையாளம் தெரியாத 3 பேர் கத்தியால் அவரை குத்தினர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.கொலை மிரட்டல்சாத்துார்: சாத்துார் தாயில்பட்டி கட்டணஞ் செவல் தங்கவேல், 73. டீக்கடையில் இருந்த போது முன் பகை காரணமாக விஜயகாசல்குளம் செந்தில்குமார், 51. கொலை மிரட்டல் விடுத்தார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளிக்கு கத்திக் குத்துவிருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டி காந்திநகரை சேர்ந்த கட்டடத் தொழிலாளி செல்வம் 45, ஆக. 27 இரவில் மல்லாங்கிணர் ரோட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாண்டியன் நகர் தங்கமணி காலனியை சேர்ந்த கருப்பசாமி 55, அநாகரீகமாக பேசினார். இதை தட்டிக்கேட்ட செல்வத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு பறிமுதல்: இருவர் கைதுசிவகாசி: கீழத்திருத்தங்கல் பள்ளபட்டி ரோடு தேவராஜ் காலனியை சேர்ந்த யோகராஜ் 48, செல்வகுமார் 22, ஆகியோர் முத்தாட்சி மடத்திலுள்ள ஆனந்தராஜுக்கு சொந்தமான தகர செட்டில் அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்தனர். கிழக்கு போலீசார் இருவரையும் கைது செய்து, ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X