விளையாட்டு தின ஹாக்கி போட்டி

Added : ஆக 30, 2022 | |
Advertisement
விருதுநகர்: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 14 வயதுக்குட்பட்ட ஹாக்கி போட்டிகள் நடந்தது.விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியை கலெக்டர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.இதில்
விளையாட்டு தின ஹாக்கி போட்டி


விருதுநகர்: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 14 வயதுக்குட்பட்ட ஹாக்கி போட்டிகள் நடந்தது.விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியை கலெக்டர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.இதில் விருதுநகர் ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ஹிந்து நாடார் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கல்லுாரணி எஸ்.பி.கே., ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் காமராஜர் அகாடமி, ராஜபாளையம் அகாடமி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.இறுதி போட்டியில் ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உடனிருந்தார்.

மாவட்ட தடகள போட்டிகள்

சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் நடந்தது.கல்லுாரி (பொறுப்பு) முதல்வர் ஜெகநாதன் துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 43 பள்ளிகளில் இருந்து 467 மாணவர்கள் பங்கேற்றனர். உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.தேசிய விளையட்டு தின விழாவிருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் உடற்கல்வித்துறை, அகரத்தர உறுதிக்குழு சார்பில் தேசிய விளையாட்டு தின விழா நடந்தது. முதல்வர் மீனா ராணி கண்காட்சியை துவங்கி வைத்தார். உடற்கல்வித்துறை மாணவிகள் இந்தியாவின் தலைசிறந்த பெண்கள் குறித்த கருத்துப்படங்களை காட்சிப்படுத்தினர். பிற துறை மாணவிகளும் பார்வையிட்டனர்.

* சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி வரவேற்றார். அரசன் கணேசன் மெட்ரிக் பள்ளி இயக்குனர் அர்ச்சனா பேசினார். உதவி உடற்கல்வி இயக்குனர் சசிப்பிரியா நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X