பன்றி வளர்ப்பால் நோய் பரவும் அபாயம் எமன் வேடமிட்டு வந்து மனு அளிப்பு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
புறம்போக்கு இடத்தில் பன்றி வளர்ப்பதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக, எமன் வேடமிட்டு வந்தவர் மனு அளித்தார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், புறம்போக்கு இடத்தில் பன்றி வளர்ப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என, கடம்பன்குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர், எமன் வேடம் அணிந்து வந்து மனு

புறம்போக்கு இடத்தில் பன்றி வளர்ப்பதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக, எமன் வேடமிட்டு வந்தவர் மனு அளித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், புறம்போக்கு இடத்தில் பன்றி வளர்ப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என, கடம்பன்குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர், எமன் வேடம் அணிந்து வந்து மனு கொடுத்தார்.
அவர், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே, கடம்பன் குறிச்சியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கோவிலுக்கு அருகே, புறம்போக்கு இடத்தில், பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இதனால், ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக பல்வேறு நோய் தொற்று அபாயம் காத்திருக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது.
இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பஞ்., தலைவர் வாயிலாக அப்புறப்படுத்த வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பன்றிகளையும் மற்றும் பன்றிகளை அடைக்கும் பட்டியை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X