ராசிபுரம் மழை பாதிப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
ராசிபுரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. கடந்த, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், அரசு மருத்துவமனை, பழைய


ராசிபுரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. கடந்த, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், அரசு மருத்துவமனை, பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. தகவலறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், நேற்று காலை, ராசிபுரம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ராசிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பழைய கட்டடத்தில் செயல்பட்டு வரும் ஆண்கள், பெண்கள் சிகிச்சை பிரிவுகள், குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தும் பிரிவு ஆகிய, 4 வார்டுகளில் மழை நீர் சூழ்ந்து இருந்தது. அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, மழைநீரை அகற்றி வருகின்றனர். இந்த வார்டுகளில் இருந்த, 49 நோயாளிகள், புதிய கட்டடத்தில் உள்ள பிற வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்று மழைக்காலங்களில் மழைநீர் தேங்காவண்ணம், இதற்கென தனியாக மழைநீர் வடிகால் வசதி ராசிபுரம் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டு
வருகிறது.
மேலும், 2 ஹெச்.பி., பம்ப் கொண்டு, உடனுக்குடன் மழை நீரை வெளியேற்றவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில தண்ணீர் வருவதால், நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள்,
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
தொடர்ந்து, தட்டாங்குட்டை ஏரி மழை வெள்ளத்தால் நிரம்பி, ஏரிக்கு அருகில் உள்ள விளைநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் பயிர் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது நாமக்கல் ஆர்.டி.ஓ., மஞ்சுளா, ராசிபுரம் யூனியன் ஜெகநாதன், நகராட்சி தலைவர் கவிதா, கமிஷனர் அசோக்குமார் உட்பட, பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X