17 வயது மாணவர் கால்பந்து, பூப்பந்து போட்டி

Added : ஆக 30, 2022 | |
Advertisement
17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து, பூப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே, வட்ட அளவிலான, குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 17


17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து, பூப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே, வட்ட அளவிலான, குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து, கூடைப்பந்து மற்றும் பூப்பந்து
விளையாட்டுப் போட்டிகள், நேற்று நடந்தது. கால்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன. பூப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதலிடம், அலங்காநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.
கூடைப்பந்து போட்டியில், பாரதி மேல்நிலைப்பள்ளி முதலிடம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. இதற்கான ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புசெழியன் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட விளையாட்டு அரங்கில், இறகு பந்து போட்டி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஹாக்கி போட்டி, பாரதி மேல்நிலைப் பள்ளியில், கைப்பந்து, கையுந்து பந்து போட்டி, ஸ்பெக்ட்ரம் அகாடமியில், மேஜை பந்து போட்டி, காவக்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், எறிபந்து போட்டி, பாரதி மேல் பள்ளியில் கைப்பந்தும் போட்டியும் நடந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X