கடன் பெற்று தருவதாக ரூ.4.25 லட்சம் மோசடி

Added : ஆக 30, 2022 | |
Advertisement
'கடன் வாங்கி தருவதாக கூறி, 4.25 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டரிடம் மகளிர் சுய உதவிக் குழுவினர் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில், 64 பேர் சேர்ந்து, மகளிர் குழு ஏற்படுத்தி, சிறு, குறு தொழில்கள் செய்து வருகிறோம்.இந்நிலையில்,

'கடன் வாங்கி தருவதாக கூறி, 4.25 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டரிடம் மகளிர் சுய உதவிக் குழுவினர் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில், 64 பேர் சேர்ந்து, மகளிர் குழு ஏற்படுத்தி, சிறு, குறு தொழில்கள் செய்து வருகிறோம்.
இந்நிலையில், கரூரைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்டோரும், நாமக்கல் - திருச்சி சாலை, அழகுநகரைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணும், எங்களிடம் வந்து, கடன் வாங்கித்தருவதாக கூறி, 2020, டிச., 14ல், தலா, 18 ஆயிரத்து, 250 ரூபாய் வழங்கினர். அதை வட்டியும், அசலும் திருப்பி செலுத்திவிட்டோம்.
தொடர்ந்து, அதே நிறுவனத்தில் பணியாற்றும், கரூர் மாவட்டம், க.பரமத்தியைச் சேர்ந்த கார்த்திக், அனிதா ஆகியோர், குறிப்பிட்ட தொகை செலுத்தினால், 40 லட்சம் ரூபாய் கடன் தருவதாக கூறினர். இதையடுத்து, நாங்கள், 64 பேரும், மொத்தமாக, 4.25 லட்சம் ரூபாய் கட்டினோம்.
ஆனால், அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. நேரில் சென்று கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனர். நாங்கள் முன்பு பெற்ற கடனுக்கு அசல், வட்டி செலுத்திவிட்டோம்.
இருந்தும், எங்களிடம் இருந்து பெற்ற ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல், பாண்ட் பத்திரம் ஆகியவற்றை தர மறுக்கின்றனர். 40 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, 4.25 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்கள் பணம், ஆவணங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X