மொடக்குறிச்சியில் இடிந்தது வீடு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால், 46 புதுார் புதுவலசு, கருக்கம்பாளையம், ஆதிதிராவிடர் காலனி, கிழக்கு வலவு பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆனைக்கல்பாளையத்தில் வாசுதேவன் என்பவர் வீடு கனமழையால் இடிந்தது விழுந்தது. வீட்டுக்குள் துாங்கியதால் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.லக்காபுரம் - கருக்கம்பாளை


மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால், 46 புதுார் புதுவலசு, கருக்கம்பாளையம், ஆதிதிராவிடர் காலனி, கிழக்கு வலவு பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆனைக்கல்பாளையத்தில் வாசுதேவன் என்பவர் வீடு கனமழையால் இடிந்தது விழுந்தது. வீட்டுக்குள் துாங்கியதால் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
லக்காபுரம் - கருக்கம்பாளை யம் சாலையில், மழை நீர் ஓடியதால் போக்குவரத்து பாதித்தது. மழையால் பாதிக்கப்பட்ட, 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 46 புதுார் ஊராட்சி பகுதி அரசு ஆரம்ப பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை. மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
பவானியில் பரிதவிப்பு
பவானியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் கந்தன் நகர், காவேரி நகர், காவேரி வீதி பகுதிகளில் வசிக்கும், 80 பேரும் மீட்கப்பட்டு, கந்தன்பட்டறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மார்க்கெட் வீதி, பசுவேஸ்வரர் வீதியில் பாதிக்கப்பட்ட, 54 பேர் நகராட்சி துவக்கப்பள்ளியில் தங்கியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X