கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம், சேர்மன் நாகராஜ், கமிஷனர் பிரேம் ஆனந்த் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது: குடிநீர் சீராக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். புதிய தார்சாலை அமைக்க வேண்டும். முதல்வர் வருகைக்காக, கோபி டவுனில் சென்டர் மீடியன் கற்கள் அகற்றப்பட்டது. மீண்டும் கற்களை அந்த இடத்தில் வைக்காததால், சாலை விபத்து ஏற்படும் அபாயம்


கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம், சேர்மன் நாகராஜ், கமிஷனர் பிரேம் ஆனந்த் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது: குடிநீர் சீராக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். புதிய தார்சாலை அமைக்க வேண்டும். முதல்வர் வருகைக்காக, கோபி டவுனில் சென்டர் மீடியன் கற்கள் அகற்றப்பட்டது. மீண்டும் கற்களை அந்த இடத்தில் வைக்காததால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வார்டு பக்கம் வருகின்றனர். அனைத்து வார்டுக்கும் முறையாக பிரித்து அனுப்ப வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் முறையாக பணி செய்வதில்லை. சாந்திநகர், அழகு நகர், நாராயணன் நகரில், சாலைகள் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும். அதேபோல் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
கவுன்சிலர்களின் குறை, பிரச்னை, கோரிக்கைகளுக்கு சேர்மன் மற்றும் கமிஷனர் பதில் அளித்து பேசினர். கூட்டத்தில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X