நாளை சதுர்த்தி விழா விநாயகர் சிலை விற்பனை விறுவிறுப்பு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாநகரில், விநாயகர் சிலை விற்பனை, விறுவிறுப்பாக நடக்கிறது.விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் ஈரோடு மாநகரில், எம்.எஸ்., சாலையில், அரை அடி முதல் ஆறு அடி வரையிலான, விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிலைகள், 80 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் உள்ளன. இதேபோல் விநாயகர் சிலை குடைகள், சென்னையில் இருந்து


சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாநகரில், விநாயகர் சிலை விற்பனை, விறுவிறுப்பாக நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் ஈரோடு மாநகரில், எம்.எஸ்., சாலையில், அரை அடி முதல் ஆறு அடி வரையிலான, விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிலைகள், 80 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் உள்ளன. இதேபோல் விநாயகர் சிலை குடைகள், சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இது, 40 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
விநாயகர் சிலைகளை மக்கள், ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து, பூஜிக்க இயலாத நிலை ஏற்பட்டது. நடப்பாண்டு அந்த நிலை இல்லாததால், மக்கள் விரும்பி சிலைகளை வாங்கிச் செல்வதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் மாநகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை விற்பனை கடைகளும், வியாபாரமும் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X