நமது கொ.மு.க., நிர்வாகி வீட்டில் 15 பவுன், ரூ.1.50 லட்சம் திருட்டு| Dinamalar

நமது கொ.மு.க., நிர்வாகி வீட்டில் 15 பவுன், ரூ.1.50 லட்சம் திருட்டு

Added : ஆக 30, 2022 | |
காங்கேயத்தில் அரசியல் கட்சி நிர்வாகி வீட்டில், 15 பவுன் நகை, 1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கேயத்தில் தாராபுரம் சாலை, சக்தி நகர் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்வேல், 48; நமது கொ.மு.க., மாநில பொது செயலாளர். இவரின் மனைவி விஜயலட்சுமி, 40; விவசாயம், ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். கால் முறிந்ததால் கோவை தனியார்


காங்கேயத்தில் அரசியல் கட்சி நிர்வாகி வீட்டில், 15 பவுன் நகை, 1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயத்தில் தாராபுரம் சாலை, சக்தி நகர் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்வேல், 48; நமது கொ.மு.க., மாநில பொது செயலாளர். இவரின் மனைவி விஜயலட்சுமி, 40; விவசாயம், ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். கால் முறிந்ததால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 15 நாட்களாக ஊதியூரில் உள்ள தனது மைத்துனர் வீட்டில் குடும்பத்துடன் இருந்தார். கடந்த, 25ம் தேதி காங்கேயத்தில் உள்ள வீட்டுக்கு வந்தவர் ஊதியூருக்கு சென்று விட்டார்.
நேற்று காலை வீட்டுக்கதவு திறந்து கிடந்தது. அக்கம்பக்கத்தினர் தகவலின்படி தங்வேல், அவரது தம்பி ரமேஷ் அதிர்ச்சியுடன் வந்தனர். வீட்டின் பிரதான நுழைவுவாயில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவில் வைக்கப்பட் டிருந்த, 15 பவுன் நகை, 1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. கண்காணிப்பு கேமரா, பதிவு செய்யும் ஹார்ட் டிஸ்க்கையும், களவாணிகள் எடுத்துச் சென்று விட்டனர். புகாரின்படி காங்கேயம் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திருட்டு சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X