டிராக்டர் மீது தனியார் பஸ் மோதிய விபத்து: 18 பெண்கள் உள்பட 22 பேர் படுகாயம்| Dinamalar

டிராக்டர் மீது தனியார் பஸ் மோதிய விபத்து: 18 பெண்கள் உள்பட 22 பேர் படுகாயம்

Added : ஆக 30, 2022 | |
தலைவாசலில், கரும்பு லோடுடன் சென்ற டிராக்டர் மீது, தனியார் பஸ் மோதிய விபத்தில், பஸ்சில் சென்ற, 22 பேர் படுகாயமடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் இருந்து, பெரம்பலுார் சர்க்கரை ஆலைக்கு, கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர், தலைவாசல் வழியாக சென்றது. டிராக்டரை பாண்டியன், 26, ஓட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சியில் இருந்து, சேலம் நோக்கி 'அரவிந்த்' என்ற தனியார் பஸ்சை,


தலைவாசலில், கரும்பு லோடுடன் சென்ற டிராக்டர் மீது, தனியார் பஸ் மோதிய விபத்தில், பஸ்சில் சென்ற, 22 பேர் படுகாய
மடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் இருந்து, பெரம்பலுார் சர்க்கரை ஆலைக்கு, கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர், தலைவாசல் வழியாக சென்றது. டிராக்டரை பாண்டியன், 26, ஓட்டிச் சென்றார்.
கள்ளக்குறிச்சியில் இருந்து, சேலம் நோக்கி 'அரவிந்த்' என்ற தனியார் பஸ்சை, அருள்ராஜ், 30, என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை, 9:00 மணியளவில், தலைவாசல் ஏரிக்கரை பகுதி வந்தபோது, டிராக்டரின் பின் பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பஸ்சின் முன் பகுதி நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில், சின்னசேலம், மரவனேரி மணிமேகலை, 22, சின்னபிள்ளை, 50, உள்ளிட்ட, 18 பெண்கள் உள்பட, 22 பேர்
காயமடைந்தனர்.
இவர்கள் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்கு புஷ்பா, சரோஜா, செல்லம்மாள் ஆகிய மூவரை, சேலம் அரசு மருத்துவ
மனைக்கு கொண்டு சென்றனர். தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X