சேலத்தில் 3 பேர் குண்டாசில் கைது

Added : ஆக 30, 2022 | |
Advertisement
சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட, இரண்டு பேர், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் என மூன்று பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.சேலம், திருவாக்கவுண்டனுார், காமராஜர் காலனியை சேர்ந்த சின்னபையன் மகன் அர்ஜூனன், 24; இவர் மீது பள்ளப்பட்டி, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களில், ஐந்துக்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில்


சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட, இரண்டு பேர், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் என மூன்று பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சேலம், திருவாக்கவுண்டனுார், காமராஜர் காலனியை சேர்ந்த சின்னபையன் மகன் அர்ஜூனன், 24; இவர் மீது பள்ளப்பட்டி, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களில், ஐந்துக்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சேலம், ஜான்சன்பேட்டை, கிழக்கு தெருவை சேர்ந்த நடராஜன் மகன் பரசுராமன், 25; இவர் மீது, அஸ்தம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில், 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 2020ல், இவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம், தாதகாப்பட்டி, மூனாங்கரட்டை சேர்ந்த சம்பத் மகன் மணிமாறன், 32; இவர் மீது அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில், தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததாக, ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் மூவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களின் சொத்தை அபகரிக்கும் நோக்கிலும் செயல்பட்டதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
அதை ஏற்று, மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ேஹாதா நேற்று உத்தரவிட்டார். மத்திய சிறையில் உள்ள, மூன்று பேரிடமும் உத்தரவு நகல்களை இன்ஸ்பெக்டர்கள் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X