அறச்சீற்றத்தின் நாயகி திரெளபதி| Dinamalar

அறச்சீற்றத்தின் நாயகி திரெளபதி

Updated : ஆக 30, 2022 | Added : ஆக 30, 2022 | |
இன்றைக்கும் பேசு பொருளாக இருக்கும் மகாபாரத நாயகிநடந்து முடிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆன போதும் இன்னமும் திரெளபதி ஐவரை மணந்ததற்கான காரணம்தான் என்ன? என்று மக்களின் மனிதில் உழன்றுகொண்டேஇருக்கும் கேள்விக்கு விடை காண்பதே கோமல் தியேட்டர்ஸ் வழங்கிய ‛திரெளபதி' என்ற பிரம்மாண்ட நாடகம்.செலவைப்பற்றி கவலைப்படாமல் நாடகத்தை பிரம்மாண்டமாக தந்துள்ளனர்,முதலில்
latest tamil news


இன்றைக்கும் பேசு பொருளாக இருக்கும் மகாபாரத நாயகி


நடந்து முடிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆன போதும் இன்னமும் திரெளபதி ஐவரை மணந்ததற்கான காரணம்தான் என்ன? என்று மக்களின் மனிதில் உழன்றுகொண்டே

இருக்கும் கேள்விக்கு விடை காண்பதே கோமல் தியேட்டர்ஸ் வழங்கிய ‛திரெளபதி' என்ற பிரம்மாண்ட நாடகம்.


latest tamil news


செலவைப்பற்றி கவலைப்படாமல் நாடகத்தை பிரம்மாண்டமாக தந்துள்ளனர்,முதலில் பாராட்டவேண்டியதை பாராட்டிவிட்டு பிறகு விமர்சனத்திற்கு வருவோம்.


நாடகத்திற்கு மேடையேற்றி இயக்கிய தாரிணி கோமலுக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுகள் இரண்டாவதாக நல்ல தழிழை காதுகுளிர வசனமாக கேட்க காரணமாக

இருந்த வசனகர்த்தா சதிஷ்குமாருக்கு,மூன்றாவதாக திரெளபதியாக நடித்த நாடக நாயகிக்கும்,கிருஷ்ணராக ,சகுனியாக நடித்தவருக்கும், நான்காவதாக

உடையலங்காரம் செய்தவருக்கும்,ஒப்பனை கலைஞருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.


latest tamil news


பஞ்சபாண்டவர்களான தர்மன்,அர்ச்சுனன்,பீமன்,நகுலன்,சகாதவேன் ஆகியோர் திரெளபதியின் சுயம்வரத்தில் கலந்து கொள்கின்றனர்.சுயம்வரப் போட்டியில் அர்ச்சுன்

வில்வித்தையின் மூலம் திரெளபதியை மணக்கிறான்.மணந்த செய்தியை தன் தாய் குந்தியிடம் சகோதரர்களுடன் சென்று,‛ அம்மா இன்று நடந்த போட்டியில் ஒரு

பொக்கிஷத்தை வென்று வந்துள்ளேன்' என்கிறான் குந்தி தேவியோ ‛பொக்கிஷம்' எது எனத்தெரியாமல் ‛எதுவாக இருந்தாலும் நீங்கள் ஐந்து பேரும் சமமாக பிரித்துக்

கொள்ளுங்கள்' என்கிறார்.


latest tamil news


பின்னர்தான் பொக்கிஷமாக கிடைத்தது பொருளல்ல உயிருள்ள பெண் என்பதை புரிந்து கொள்கிறார்,இருந்தாலும் தான் சொன்னதை வாபஸ் வாங்காமல் நீ ஒரு ஐந்து முக

விளக்கு தாயே என்கிறார்,தாயின் வாக்கை காப்பாற்ற தனயன்கள் தயாராகின்றனர் ஆனால் திரெளபதியின் மனதில் கடும் போராட்டம்.இது என்ன தர்மம்

எதிர்காலம் ஏளனம் பேசாதோ என்றெல்லாம் கண்ணீர் வடிக்கிறார்.


நீ முற்பிறவியில் ஐந்து சிறந்த குணம் கொண்ட கணவன் வேண்டும் என்று சிவனை வேண்டும் போது தவறுதலாக ஐந்து குணம் கொண்டவர்கள் வேண்டும் என்று

கேட்டுவிட்டாய் அதுதான் காரணம் என்று அசரிரீ ஒலிக்கிறது.


ஆனாலும் திரெளபதி சமதானமாகவில்லை


தான் தோழமையுடன் வழிபடும் கிருஷ்ணனை இதற்கு விடைகாண வேண்டுகிறாள்


இது தர்மமல்லதான் ஆனால் இதிலும் ஒரு அறம் இருக்கிறது அதை காலம் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது, எதிர்காலம் உன்னை ஏளனம் செய்யாது

தெய்வமாக போற்றும் காரணம் நீ செய்யப்போகும் செயல்கள் என்று கூறி ஐவருக்கு மனைவியாக இருக்க ஆசிர்வாதிக்கிறார்.


இப்படி இன்னும் பல காரணங்களைச் சொல்லி நாடகத்தின் இடைவேளை வரை திரெளபதியையும்,பார்வையாளர்களையும் சமாதானப்படுத்த நாடககுழுவினர்

முயற்சிக்கின்றனர்.


பிறகுதான் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் மகாபாரதத்தை சொல்லி முடிக்கவேண்டும் என்றே கதையின் கருவிற்குள் வருகின்றனர்.


தான் தரையில் வழுக்கி விழுந்ததைப் பார்த்து திரெளபதி சிரித்த சிரிப்பைதான் துரியோதனனால் மறக்கமுடியவில்லை, திரெளபதியை அவமானப்படுத்தியே தீர்வது என்றே

எண்ணத்தின் விளைவுதான் சூதாட்டம்.


சூதில் எல்லாவற்றையும் இழந்த தர்மன் திரெளபதியையும் பணயம் வைத்து இழக்கிறான்.


அடிமையாகிவிட்ட திரெளபதியின் துகிலுரிய துச்சாதனனுக்கு உத்திரவிடப்படுகிறது, அவனும் திரெளபதியின் சேலையைப்பிடி்து இழுக்கிறான் செய்வதறியாது கிருஷ்ணா

என்று திரெளபதி கதற கிருஷ்ணன் சேலையைக் கொடுத்து திரெளபதியின்மானம் காக்கிறார்.


என் துகிலைப்பிடித்து இழுத்த துச்சாதனனின் மார்பு ரத்தத்தை பூசித்தான் இனி என் தலையை முடிவேன் என்று கூந்தலை அவிழ்த்து சபதமிடுகிறாள் திரெளபதி மேலும்

என்னை தொடையில் அமரச்சொன்ன துரியோதனின் தொடைகளை பீமன் உடைத்து அவனது உயிரைக்குடித்த பிறகுதான் என் மனம் அமைதியடையும் என்றும்

சபதமிடுகிறார்.


அடுத்த காட்சியிலேயே திரெளபதி முடிந்த கூந்தலோடு கிருஷ்ணனிடம் நியாயம் கேட்க வர, அவரது சபதம் முடிந்தது நாடகமும் முடிந்தது என்பதை பார்வையாளர்கள்

உணர்ந்து கொள்கின்றனர்.


கண்ணகி என்றால் அவள் பாண்டியன் அவையில் நீதி கேட்டு ஒற்றைச் சிலம்போடு எழுப்பிய குமுறல் எப்படி நினைவிற்கு வருமோ அது போல திரெளபதி என்றால்

அவிழ்ந்த கூந்தலோடு கோபத்தில் முகம் சிவக்க ஆண்கள் நிறைந்த அந்த அவை நடுங்க சபதமிடும் திரெளபதிதான் நினைவிற்கு வருவார்


ஆகவே அந்தக் காட்சியை எப்படி காட்சிப்படுத்தப் போகிறார்கள் என்ற ஆவலோடு எதிர்பார்த்திருந்த பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே


வீட்டு விலக்கான நேரத்தில் திரெளபதி இடுப்பில் ஒட்டியாணம்,பட்டுப்புடவை,பல்வேறு வித நகைகளுடன் அரசகுமாரி போல தனித்து உட்கார்ந்திருப்பாரா?என்பது

ஒரு கேள்வி


கண்ணகி போல எளிய உடையில் வந்து, என்னையா தொடையில் உட்காரச் சொன்னாய் துச்சனே! துரியோதனா! உன் தொடையை பிளந்து உயிர் குடிப்பேனடா! என்று

ஆவேசம் பொங்க, கூந்தல் காற்றில் பறக்க, கண்களில் ரெளத்திரம் பொங்க, முகமெங்கும் ஆத்திரத்தில் சிவக்க வசனம் பேசியிருந்தால், பார்வையாளர்களுக்கும் சேர்த்து

ரத்தம் கொதித்து இருக்கும் ‛வெட்டுறா துரியோதனனை' ‛குத்துறா துச்சாதானனை' என்று குரல் கொடுத்திருப்பர்


ஆனால் அரசகுமாரிக்கான ஆடை அலங்காரம் மேக்கப்பில் கவனம் வைத்து அது கலையாமல் வசனம் பேசியது போல இருந்ததால் உணர்வோட்டமாக இருந்திருக்க

வேண்டிய காட்சியில் உயிரோட்டம் இல்லை


மேலும் இது திரெளபதிக்கான நாடகமா? அல்லது கிருஷ்ணனுக்கா நாடகமா? என்று சொல்லமுடியாத அளவு கிருஷ்ணனாக வருபவர்தான்

நாடகம் முழுவதும் கைதட்டல் பெறுகிறார்.


அதிலும் யுத்த களத்தில், ‛நீ மட்டும் திரெளபதி இல்லை இன்றைக்கும் ஆணாதிக்கத்தால் அவமானப்படும் ஆயிரக்கணக்கான திரெளபதிகள் இருந்து கொண்டுதான்

இருக்கிறார்கள்' என்று பெண்கள் பக்கம் கைநீட்டி வசனம் பேசும் போது கரவொலி காதைப்பிளக்கிறது.


திரெளபதியை துாக்கிப்பிடிக்க அவரது கதையில் இன்னும் பல சம்பவங்கள் உள்ளன


பாண்டவர்களின்பனிரெண்டு ஆண்டு கால வனவாசத்தின் அவர் காட்டிய உறுதி,வாய்ப்பு இருந்தும் அரச வாழ்க்கையை உதறி வன வாழ்க்கைக்கு மாறிய எளிமை,பெற்ற

பிள்ளைகள் ஐவரை போரில் பலி கொடுத்த போதும் கலங்காது நின்ற தன்மை,கர்ணனே ஆனாலும் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று முகத்திற்கு நேராக சொல்லும்

நெஞ்சுறுதி,கிருஷ்ணன் கடவுளின் அவதாரம் என்றாலும் எங்கே போரை நிறுத்திவிடுவாரோ தன் சபதம் முடிக்கமுடியாமல் போய்விடுமோ என்று தவித்து வாதம் செய்யும்

குணம், இப்படி திரெளபதியின் வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட அறச்சீற்றம்தான் அவரை தெய்வமாக்கியது, கோவில் கட்டி கும்பிடச் செய்தது.


நிறைவாக மக்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல நாடகம் இது அந்த அளவிற்கு உழைத்திருக்கிறார்கள், அந்த உழைப்பு கிளைமாக்சில் நேர்த்தியாக

இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் மற்றபடி நாடகக்குழுவினர்‛திரெளபதி பார்ட் டூ' எடுத்து திரெளபதிக்கு இன்னும் சிறப்ப சேர்க்கலாம்,வாழ்த்துக்கள்


-எல்.முருகராஜ்புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X