தற்கொலை செய்வோரில் தினக்கூலிகள் அதிகம்!

Updated : ஆக 31, 2022 | Added : ஆக 30, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: தற்கொலை செய்வோரில், தினக்கூலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து, அதிகரித்து வருவது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2021ல் 1,64,033 தற்கொலை செய்து கொண்டவர்களில் 4ல் ஒரு பங்கினர்(42,004 - 25.6 சதவீதம் பேர்) தினக்கூலிகள் ஆவார்கள்.இது தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய அளவில், தற்கொலை செய்வோரில் சராசரியை
sucide, daily waige, ncrb, தற்கொலை, தினக்கூலிகள்

புதுடில்லி: தற்கொலை செய்வோரில், தினக்கூலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து, அதிகரித்து வருவது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2021ல் 1,64,033 தற்கொலை செய்து கொண்டவர்களில் 4ல் ஒரு பங்கினர்(42,004 - 25.6 சதவீதம் பேர்) தினக்கூலிகள் ஆவார்கள்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news


தேசிய அளவில், தற்கொலை செய்வோரில் சராசரியை விட, தினக்கூலிகளின் சராசரி அதிகரித்து வருவது மேற்கண்ட புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த 2020 முதல் 2021 வரை தேசிய அளவில் தற்கொலை செய்தவர்களின் விவரம் 7.17 சதவீதமாக உள்ளது. ஆனால், அதில், தினக்கூலிகளின் விகிதம் 11.52 சதவீதமாக உள்ளது.


விவசாய தொழிலாளர்கள்

அதேபோல், விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் கடந்த 2021 ம் ஆண்டு 10,881 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், 5,318 பேர் விவசாயிகள். 5,563 பேர் விவசாய தொழிலாளர்கள். மேலும் விவசாயிகள் தற்கொலையானது. 2019ல் 5,957 லிருந்து 2020ல் 5,579 ஆக குறைந்தது. ஆனால், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை என்பது 2019ல் 4,324 ல் இருந்து 2020ல் 5,098 ஆக அதிகரித்துள்ளது.

மாணவர்கள், சம்பளம் பெறுபவர்கள், தினக்கூலிகள், ஓய்வு பெற்றவர்கள், வேலையில்லாதவர்கள், சுய தொழில் செய்வோர்கள், மனைவிகள், விவசாயி தொழிலில் ஈடுபட்டவர்கள், மற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்டது.

2021ல் சுயதொழில் செய்வோர் 20,231 பேரும், வேலையில்லாதவர்கள் 13,714, மனைவிகள் 23,179 பேரும் , மாணவர்கள் 13,089 பேரும், மற்ற பிரிவினர் 23,547 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


latest tamil news


குடும்ப பிரச்னை காரணமாக 33.2 சதவீதம் பேர், திருமணம் சார்ந்த பிரச்னை காரணமாக 4.8 சதவீதம் பேர், உடல்நலக்குறைவு காரணமாக 18.6 சதவீதம் பேர் என மொத்தம் 56.6 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.மாநில வாரியாக

தற்கொலையில் முதலிடத்தில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 22,207 பேர் தற்கொலை செய்துள்ளனர். தொடர்ந்து தமிழகம்(18,925), ம.பி., (14,956), மே.வங்கம் ( 13,500), கர்நாடகா (13,056) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

கடந்த 2020 ஐ காட்டிலும், 2021ல் தற்கொலை அதிகரித்த மாநிலங்கள் பட்டியலில், தெலுங்கானா (26.2%), உ.பி.,(23.5%), புதுச்சேரி(23.5%), ஆந்திரா(14.5%), கேரளா(12.3) தமிழகம்(12.1) மஹாராஷ்டிரா(11.5% ) மணிப்பூர்(11.4%) ஆகியன உள்ளன.

அதேநேரத்தில், தற்கொலை குறைந்த மாநிலங்கள் பட்டியலில், லட்சத்தீவு(50%), உத்தரகண்ட்(24%), ஜார்க்கண்ட்(15%), ஜம்மு காஷ்மீர்(13.9%) அந்தமான் (11.7%)ஆகிய மாநிலங்கள் உள்ளன. இவ்வாறு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2021 அறிக்கையின்படி 2021 ம் ஆண்டில் டில்லியில் பெண்களுக்கு எதிராக 13,892 குற்றங்கள் நடந்துள்ளன. இது கடந்த 2020ம் ஆண்டை காட்டிலும் 40% அதிகமாகும். அங்கு 32.20 சதவீத குற்றங்கள் பதிவாகியதால் டில்லி முதலிடத்தில் உள்ளது. டில்லிக்கு அடுத்து மும்பையில் 5,543 குற்றங்களும், மும்பையில் 3,127 குற்றங்களும் நடந்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
31-ஆக-202207:20:52 IST Report Abuse
Balaji இந்த லிஷ்ட்டுலோ சாதிபாசா போன்றோர் தற்கொலைகளும் அடங்குமா? ஹி ஹி.
Rate this:
Cancel
31-ஆக-202206:24:23 IST Report Abuse
அப்புசாமி நல்லதுதான்.ஏழைகள் குறைந்தால் பணக்காரர்கள் அதிகமாயிடுவாங்க. எல்லாம் ஒரு கணக்குதான்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
30-ஆக-202217:02:16 IST Report Abuse
Svs Yaadum oore இந்தியாவில் தற்கொலை மிக குறைவான மாநிலங்கள் பீகார் 0.7 , உத்தர பிரதேசம் 2.6 ஜார்க்கண்ட் 4.7 உத்தர காண்ட் 6.3 ராஜஸ்தான் 7.0 பஞ்சாப் 8.6 (ஒரு லட்சம் நபர்களுக்கு தற்கொலை யால் இறப்போர் )
Rate this:
31-ஆக-202212:55:26 IST Report Abuse
அப்புசாமிஉண்மைதான். ஏழை, பாழைங்க உ.பி, பிஹார்லேர்ந்து பஞ்சம்.பொழைக்க இங்கே வந்துடறாங்க. அதான் அங்கே தற்கொலை குறைவு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X