உயிரை கையில் பிடித்து கொண்டு மக்கள் கரை சேரும் ‛அவலம்'

Added : ஆக 30, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அருகே உள்ள கடம்பூர் மலைப் பகுதியை அடுத்த மாக்கம்பாளையம், கோம்பை தொட்டி, கோவிலூர், அருகியம், உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. கடம்பூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணிக்க வேண்டும், குரும்பூர் முதல் மாக்கம்பாளையம் வரை உள்ள சாலை கரடு முரடாக உள்ளது. செல்லும் வழியில் சக்கரை பள்ளம், குரும்பூர் பள்ளம், ஆகிய
மக்கள், கரை சேரும், அவலம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அருகே உள்ள கடம்பூர் மலைப் பகுதியை அடுத்த மாக்கம்பாளையம், கோம்பை தொட்டி, கோவிலூர், அருகியம், உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. கடம்பூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணிக்க வேண்டும், குரும்பூர் முதல் மாக்கம்பாளையம் வரை உள்ள சாலை கரடு முரடாக உள்ளது. செல்லும் வழியில் சக்கரை பள்ளம், குரும்பூர் பள்ளம், ஆகிய இரண்டு காட்டாறுகள் குறுக்கே ஓடுகிறது.
இதனால் மாக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள சக்கரை பள்ளம்,குரும்பூர் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். மழை வெள்ளம் வடியும் வரை போக்கு வரத்து துண்டிக்கப்படும். இது தான் வாடிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் இன்று(ஆக.30) காலை சென்ற அரசு பஸ் குரும்பூர் பள்ளத்தை சிரமப்பட்டு கடந்து அருகியம் வரைசென்று பயணிகளை இறக்கிவிட்டு சக்கரை பள்ளத்தில் வெள்ளநீர் அதிகளவில் செல்வதால் மாக்கம்பாளையம் செல்லாமல் திரும்ப வந்துவிட்டது.

மழை காலங்களில் மாக்கம்பாளையம் தனித்தீவு போல் ஆகி விடும். பல ஆண்டு காலமாக மாக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம், ஆகிய இரண்டு காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம், இல்லாததால் மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு கரை சேரும் அவலம் நிலவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-ஆக-202221:03:38 IST Report Abuse
Ramesh Sargam மக்கள் அவதிப்படும்போது ஒரு அமைச்சரும், 'ஒரே' முதலமைச்சரும் உதவி செய்ய வரமாட்டாங்க. வெள்ளம் வடிந்தவுடன், வெள்ள நிவாரணம் அளிக்க போட்டிபோட்டுக்கிட்டு வரிசையில் வருவார்கள், நாம் தவறாக தேர்ந்தெடுத்த அமைச்சர்கள்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
30-ஆக-202219:27:11 IST Report Abuse
a natanasabapathy Yellaa arasiyal kaatchikalum nakarathil ullavarkalin nalanai mattume perithaaka yennukiraarkal. Yenenil inku thaan athika ottukal ullana malai kiraamankalai kandukolvathe illai ottu vaanka mattum kazhuthai Mel yeri sella thayanka maattaarkal.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-ஆக-202219:08:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாதனை படைத்தீரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X