பிரபல அமெரிக்க தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் 92வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளில் அவர் செய்த சாதனைகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
வாரன் எட்வர்ட் பஃபெட் . 1930ம் ஆண்டு ஆக., 30 அன்று அமெரிக்காவின் நெஃப்ராக்ஸா மாநிலத்தில் ஒமாஹா நகரில் பிறந்தார்.
உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.
கடந்த 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
![]()
|
பெரும் பணக்காரர் என்றாலும் எளிமையைப் பின்பற்றி வந்ததால் 'ஒமாகாவின் முனிவர்' என்று அழைக்கப்பட்டார் வாரன் பஃபெட்.
பிரசித்திபெற்ற கொடையாளரான பஃபெட் தனது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார். இவர் கிரின்னல் கல்லூரி வாரிய அறங்காவலர்களுள் ஒருவராகவும் உள்ளார்.
2012-ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையின் உலகின் முக்கிய 100 செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற வாரன் பஃபெட் 1951-54 வரை ஒமாகாவில் உள்ள பபெட்-ஃபால்க் & நிறுவனத்தில் முதலீட்டு விற்பனையாளராகவும் 1954-56 வரை நியூயார்க்கில் உள்ள 'கிரகாம்-நியூமேன் கார்ப்' நிறுவனத்தில் பங்கு முதலீட்டு ஆய்வாளராகவும், 1956-1969 வரை ஒமாகாவில் உள்ள பபெட் பார்ட்னர்ஷிப் லிமிடெட் நிறுவனத்தில் பொதுப் பங்குதாரராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு பபெட்-சூசன் தாம்சன் என்பவரை மணந்தார். அடுத்த வருடத்தில் அவர்களின் முதல் குழந்தையான சூசன் ஆலிஸ் பபெட் பிறந்தார்.
![]()
|
இன்றும் இளம் தலைமுறை தொழில் முனைவோர் பலருக்கு பஃபெட்டின் முதலீட்டு அறிவுரைகள் பாடமாக விளங்குகின்றன.