முகூர்த்தநாள், விநாயகர் சதுர்த்தி விழா; பூக்களின் விலை மும்மடங்கு உயர்வு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : விநாயகர்சதுர்த்தி விழா, முகூர்த்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்து கிலோ மல்லிகை ரூ.1600, கனகாம்பரம் ரூ.2400க்கு விற்றது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடிஒருசில பகுதிகளில் மட்டுமே நடக்கிறது. மதுரை, புதுக்கோட்டை சந்தைகளில் இருந்து மொத்த வியாபாரிகள் பூக்களை வாங்கி வந்து சந்தையில் விற்கின்றனர். இதன் காரணமாக
முகூர்த்தநாள், விநாயகர் சதுர்த்தி விழா; பூக்களின் விலை மும்மடங்கு உயர்வு

ராமநாதபுரம் : விநாயகர்சதுர்த்தி விழா, முகூர்த்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்து கிலோ மல்லிகை ரூ.1600, கனகாம்பரம் ரூ.2400க்கு விற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடிஒருசில பகுதிகளில் மட்டுமே நடக்கிறது. மதுரை, புதுக்கோட்டை சந்தைகளில் இருந்து மொத்த வியாபாரிகள் பூக்களை வாங்கி வந்து சந்தையில் விற்கின்றனர். இதன் காரணமாக பூக்களின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இன்று (ஆக.31) விநாயகர் சதுர்த்தி விழா, தொடர்ந்து முகூர்த்த நாட்கள் எதிரொலியாக பூக்களின் விலை வழக்கமான விலையை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு பூக்கட்டும் வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு மல்லிகை ரூ.400க்கு விற்றது ரூ.1600க்கும், 300க்குவிற்ற ரோஜா ரூ.800, ரூ.400 க்கு விற்ற முல்லை ரூ.1700, செவ்வந்தி ரூ.150 ல் இருந்து ரூ. 750 என விலை அதிகரித்துஉள்ளது. ரூ.10க்கு விற்ற கதம்பம் மூழம் ரூ.20க்கு விற்கின்றனர். அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை,' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X