புதர் மண்டிய கவாத்து மைதானம்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்தமான கவாத்து மைதானம் புதர் மண்டி இருப்பதால் அருகில் உள்ள வண்டல்நகர் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.போலீசார் பயன்படுத்தும் கவாத்து மைதானத்தில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மணல் திருட்டு, விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட கார், லாரி, மாட்டுவண்டி, பைக் உள்ளிட்டவற்றை குவித்து வைத்துள்ளனர். ஆட்கள்
புதர் மண்டிய கவாத்து மைதானம்

திருப்புவனம் : திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்தமான கவாத்து மைதானம் புதர் மண்டி இருப்பதால் அருகில் உள்ள வண்டல்நகர் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

போலீசார் பயன்படுத்தும் கவாத்து மைதானத்தில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மணல் திருட்டு, விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட கார், லாரி, மாட்டுவண்டி, பைக் உள்ளிட்டவற்றை குவித்து வைத்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் கருவேல மரங்கள், நாணல்கள், உரச்செடிகளும் நிறைந்து காடு போன்ற மைதானத்தில் பல்வேறு விஷ பூச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன.

இரவில் வண்டல் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடிவதில்லை.வண்டல் நகர் சரவணன் கூறியதாவது, இப்பகுதி மக்களுக்கு முறையான வீடுகள் இல்லை. தட்டி, சாக்கு உள்ளிட்டவற்றால் தடுப்புகள் அமைத்து குடியிருந்து வருகிறோம். புதர் மண்டிய கவாத்து மைதானத்தில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. கவாத்து மைதானத்தை சுத்தம் செய்யவேண்டும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X