சென்னை : விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும், முதல்வர் ஸ்டாலின் வழக்கம்போல வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இன்று (ஆக.,31) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தமிழக கவர்னர் ரவி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனி சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், வழக்கம்போல வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போதும் தன் நிலைப்பாட்டை முதல்வர் தொடர்ந்தார்.