மாற்றங்களுக்கு தயாராகும் 'மாருதி சுசூகி' நிறுவனம்

Added : ஆக 31, 2022 | |
Advertisement
புதுடில்லி:'மாருதி சுசூகி' நிறுவனத்தின் நிறுவன செயல்பாட்டில் மாற்றங்கள் இருக்கும் என, அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா சூசகமாக தெரிவித்துள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் நேரடியாக நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஆர்.சி.பார்கவா, மேலும் கூறியதாவது: 'சுசூகி ஜப்பான்' நிறுவனத்துக்கு, மாருதி சுசூகி மிக முக்கியமான
மாற்றங்களுக்கு, தயாராகும்,'மாருதி சுசூகி', நிறுவனம்

புதுடில்லி:'மாருதி சுசூகி' நிறுவனத்தின் நிறுவன செயல்பாட்டில் மாற்றங்கள் இருக்கும் என, அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா சூசகமாக தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் நேரடியாக நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஆர்.சி.பார்கவா, மேலும் கூறியதாவது: 'சுசூகி ஜப்பான்' நிறுவனத்துக்கு, மாருதி சுசூகி மிக முக்கியமான அங்கமாகும். சுசூகியின் உலகளாவிய வணிகத்தில், மாருதி சுசூகியின் பங்கு கிட்டத்தட்ட 60 சதவீதமாகும்.
கடந்த நிதியாண்டில், சுசூகி குழுமத்தின் உலகளாவிய உற்பத்தி 28 லட்சம் ஆகும். இதில் இந்தியாவிலிருந்து மட்டும் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 16 லட்சம் வாகனங்களாகும். இது கிட்டத்தட்ட 60 சதவீதமாகும்.மாருதி நிறுவனம், சுசூகியின் செயல்பாட்டில் முக்கிய அங்கமாகியிருக்கும் நிலையில், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சுசூகி அமைக்க இருக்கிறது.
இந்நிலையில், அனைத்து பிரிவிலும் எதிர்கால வளர்ச்சிக்கு தயாராக வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இருப்பினும், எத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X