எக்கசக்க ஆஃபர்களுடன் நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 பிளஸ் அறிமுகம்..!| Dinamalar

எக்கசக்க ஆஃபர்களுடன் நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 பிளஸ் அறிமுகம்..!

Updated : ஆக 31, 2022 | Added : ஆக 31, 2022 | |
நாய்ஸ் (Noise) நிறுவனம் புதிதாக நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 பிளஸ் டிடபிள்யு என்ற டிடபிள்யு (Noise Buds VS102 Plus TWS) இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.கேட்ஜெட்கள் வரிசையில், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ், ஹெட்போன்ஸ் என பல்வேறு சாதனங்களை வெளியிட்டு வரும் நாய்ஸ் நிறுவனம் தற்போது நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 டிடபிள்யு பிளஸ் என்ற புதிய இயர்பட்ஸை தனது 8ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் 75%
DinamalarDotcom, Special, Technology, Smartphones&Gadgets, Noise, Noise buds vs102 plus, தினமலர்டாட்காம், ஸ்பெஷல், டெக்னாலஜி, ஸ்மார்ட்போன்ஸ்&கேட்ஜெட்ஸ், நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 பிளஸ்

நாய்ஸ் (Noise) நிறுவனம் புதிதாக நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 பிளஸ் டிடபிள்யு என்ற டிடபிள்யு (Noise Buds VS102 Plus TWS) இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.

கேட்ஜெட்கள் வரிசையில், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ், ஹெட்போன்ஸ் என பல்வேறு சாதனங்களை வெளியிட்டு வரும் நாய்ஸ் நிறுவனம் தற்போது நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 டிடபிள்யு பிளஸ் என்ற புதிய இயர்பட்ஸை தனது 8ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் 75% வரை தள்ளுபடியுடன் அற்புதமான சூப்பர் அனிவெர்சரி ஷாப்பிங் விற்பனையையும் அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 30 முதல் துவங்கி செப்டம்பர் 4 வரை நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.


latest tamil news
நாய்ஸ் பட்ஸ் விஎஸ்102 பிளஸ் இயர்பட்ஸ் தனித்துவமான Flybird வடிவமைப்பு உடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த இயர்பட்ஸ் குவாட் மைக்குடன் கூடிய என்விரான்மென்டல் நாய்ஸ் கான்சலேஷன் (ENCTM) மற்றும் ஹைப்பர் சிங்க் டிம் (Hyper SyncTM) அம்சத்துடன் வருகிறது. இதன்மூலம் தெளிவான ஆடியோ அனுபவத்தை பெறமுடியும். இதில் தடையற்ற இணைப்புக்காக புளூடூத் 5.3 அம்சம் வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news
பேட்டரி பேக்கப்பை பொறுத்தவரை, இந்த இயர்பட்ஸ் 36 மணிநேர இயங்கும் பிளே டைம் நேரத்தை கொண்டுள்ளது. அதுபோக, இந்த டிவைஸில் InstachargeTM வசதி வழங்கப்பட்டுள்ளதால், 10 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் போது 120 நிமிடங்களுக்கு பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. இத்துடன் டைப்-சி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு அம்சத்திற்காக IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது.


latest tamil news
இப்போது இந்த டிவைஸ் Flipkart மற்றும் Noise பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெறும் ரூ.799 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதனுடன் நாய்ஸ் நிறுவனத்தின் சூப்பர் அனிவெர்சரி ஷாப்பிங் விற்பனையின் மூலம் அணைத்துத் தயாரிப்புகளின் மீதும் 75% வரை தள்ளுபடி கிடைக்கிறது, இந்த சலுகையில், ColorFit Pro 4, XFit 2, Pulse, Xtreme மற்றும் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட Noise buds VS102 Plus போன்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சில தயாரிப்புகள் மீதும் நம்ப முடியாத தள்ளுபடியை வழங்குகிறது. இந்த விற்பனை ஆகஸ்ட் 30 முதல் துவங்கி செப்டம்பர் 4 வரை நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.


latest tamil news
இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக நாய்ஸ் இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யும் 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு வெறும் 1 ரூபாயில், ரூ. 4,999 மதிப்புள்ள ஸ்மார்ட்வாட்ச்களை வெல்லும் வாய்ப்பை நிறுவனம் வழங்கியுள்ளது. நாய்ஸ் இணையதளத்தில் பதிவு செய்பவர்கள், இந்தச் சலுகைகளை 4 மணிநேர முன்கூட்டியே அணுகுவதன் பலனையும் அனுபவிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X