ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வளர்ச்சி 13.5 சதவீதம்

Added : ஆக 31, 2022 | |
Advertisement
புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், 13.5 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டில், இதே காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 20.1 சதவீதமாக இருந்தது. பெரும்பாலான பொருளாதார ஆய்வாளர்கள், ஜூன் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என ஏற்கனவே கணித்திருந்தனர்.
ஏப்ரல் - ஜூன்,காலாண்டில்,வளர்ச்சி,13.5 சதவீதம்

புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், 13.5 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், இதே காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 20.1 சதவீதமாக இருந்தது. பெரும்பாலான பொருளாதார ஆய்வாளர்கள், ஜூன் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என ஏற்கனவே கணித்திருந்தனர்.
தர நிர்ணய நிறுவனமான 'இக்ரா' வளர்ச்சி 13 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. எஸ்.பி.ஐ., 15.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது.ஆகஸ்ட் மாத துவக்கத்தில், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தில், வளர்ச்சி கிட்டத்தட்ட 16.2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், தேசிய புள்ளியியல் அலுவலகம், ஜூன் காலாண்டில் வளர்ச்சி 15.5 சதவீதமாக உள்ளதாக அறிவித்துள்ளது.


நிதி பற்றாக்குறை


நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 20.5 சதவீதமாக உள்ளது. அதாவது 3.41 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X