தீர்க்கப்படாத தொகுதி பிரச்னை பட்டியல் கொடுத்தார் வானதி

Added : ஆக 31, 2022 | |
Advertisement
கோவை:கோவை தெற்கு தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள் அடங்கிய பட்டியலை, மாவட்ட கலெக்டரிடம், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வழங்கினார்.'தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத, 10 முக்கிய பிரச்னைகளை மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்களிடம் தெரிவித்திருந்தார்.அதன்படி, கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி

கோவை:கோவை தெற்கு தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள் அடங்கிய பட்டியலை, மாவட்ட கலெக்டரிடம், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வழங்கினார்.

'தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத, 10 முக்கிய பிரச்னைகளை மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்களிடம் தெரிவித்திருந்தார்.அதன்படி, கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தீர்க்கப்படாத பிரச்னைகள் பட்டியலை கலெக்டர் சமீரனிடம் வழங்கினார்.

பட்டியலில் கூறப்பட்டுள்ளதாவது:'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்துக்கு உட்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பெரிய கடை வீதி, ராஜவீதி, ரங்கே கவுடர் வீதி, ஒப்பணக்கார வீதியில் ஒருங்கிணைந்த 'மல்டி லெவல் பார்க்கிங்' வசதி அவசியம்.தங்க நகை பட்டறைகளுக்கு ஒருங்கிணைந்த தொழில் வளாகம், குடியிருப்பு வசதி செய்ய வேண்டும்.

கோவையில் 'மெட்ரோ' ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். பல்லுயிர் தாவரவியல் பூங்கா நகரின் சிறைச்சாலை வளாகத்தில் அமைக்க வேண்டும். நேரு ஸ்டேடியம் உலகத்தரம் வாய்ந்த அரங்கமாக உருவாக்கப்பட வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரில் கோவை விளையாட்டு 'அகாடமி' நிறுவப்பட வேண்டும்.

சாய்பாபா காலனி அண்ணா தினசரி மார்க்கெட் தரைத்தளம் அமைத்து, குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக்க வேண்டும்.லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற தானியங்கி மோட்டார்கள் பொருத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X