இடிந்து விழுந்தது சுற்றுச்சுவர் வடமாநில பெண், பள்ளி மாணவி பலி

Added : ஆக 31, 2022 | |
Advertisement
ஓசூர்:தேன்கனிக்கோட்டையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், வட மாநில பெண், பள்ளி மாணவி பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை யாரப் தர்கா உரூஸ் திருவிழா, கடந்த 25ல் துவங்கி, 27 வரை நடந்தது. இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜைதுல் ஹக் மனைவி ஹாமியன் பேகம், 35, இசாத் அலி, 42, மற்றும் ரபிக்வுல் இஸ்லாம், 22, ஆகியோர் பொம்மை விற்றனர்.திருவிழா முடிந்து நேற்று காலை 11:30 மணிக்கு,

ஓசூர்:தேன்கனிக்கோட்டையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், வட மாநில பெண், பள்ளி மாணவி பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை யாரப் தர்கா உரூஸ் திருவிழா, கடந்த 25ல் துவங்கி, 27 வரை நடந்தது. இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜைதுல் ஹக் மனைவி ஹாமியன் பேகம், 35, இசாத் அலி, 42, மற்றும் ரபிக்வுல் இஸ்லாம், 22, ஆகியோர் பொம்மை விற்றனர்.

திருவிழா முடிந்து நேற்று காலை 11:30 மணிக்கு, பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது, தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவைச் சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவியான பாலாஜி மகள் சகானா, 11 மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியான வெங்கடேஷ் மகள் ஹேமாவதி, 12, ஆகியோர் அங்கு வந்தனர்

தர்கா அருகே உள்ள அமர நாராயண சுவாமி கோவில் அரச மரத்தடியிலுள்ள சுவாமி சிலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது அருகே, ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 12 அடி உயரத்திற்கு, 'ஹாலோ பிளாக்' கற்களால் கட்டியிருந்த சுற்றுசுசுவர் இடிந்து விழுந்தது.

அதன் அருகில் இருந்த மாணவியர் சகானா, ஹேமாவதி மற்றும் கடை வைத்திருந்த ஹாமியன் பேகம், இசாத் அலி மற்றும் ரபிக்வுல் இஸ்லாம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், ஹாமியன் பேகம் மற்றும் மாணவி சகானா, மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தனர். மாணவி ஹேமாவதி தனியார் மருத்துவமனையிலும், இசாத் அலி, ரபிக்வுல் இஸ்லாம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரிக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X