100 சவரன் கொள்ளை| Dinamalar

100 சவரன் கொள்ளை

Added : ஆக 31, 2022 | |
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனுாரைச் சேர்ந்தவர் சந்திரன், 65; இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.கடந்த மாதம், 27ல் வீட்டை பூட்டி, கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை, 10:00 மணிக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து

ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனுாரைச் சேர்ந்தவர் சந்திரன், 65; இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.கடந்த மாதம், 27ல் வீட்டை பூட்டி, கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை, 10:00 மணிக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.உள்ளே சென்று பார்த்ததில், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, 20 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

* ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன், 59. சென்னை ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி சேலம் சென்றார். நேற்று காலை, 11:00 மணிக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவிலிருந்த, 80 சவரன் நகை, 1 லட்சம் ரூபாயை திருடிச்சென்றது தெரியவந்தது. அரக்கோணம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X