வெறும் 21 கி.மீ., தான்! இதை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுறாங்க; முட்டுக்கட்டை போடும் பாலக்காடு கோட்டம்

Added : ஆக 31, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி-கிணத்துக்கடவு இடையே, 21 கி.மீ.,துாரத்தை தன்வசம் கொண்டுள்ள பாலக்காடு கோட்டம், இதர இரு கோட்டங்களில் இருந்து ரயில்களை இயக்க முட்டுக்கட்டை போடுவதாக அதிருப்தி எழுந்துள்ளது.திண்டுக்கல் - பொள்ளாச்சி - போத்தனுார் இடையேயான, 160 கி.மீ., ரயில் வழித்தடமானது, மதுரை ரயில்வே கோட்டத்தின்கீழ் இருந்தது. அதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு ஸ்டேஷன்கள் பாலக்காடு
வெறும் 21 கி.மீ., தான்! இதை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுறாங்க; முட்டுக்கட்டை போடும் பாலக்காடு கோட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி-கிணத்துக்கடவு இடையே, 21 கி.மீ.,துாரத்தை தன்வசம் கொண்டுள்ள பாலக்காடு கோட்டம், இதர இரு கோட்டங்களில் இருந்து ரயில்களை இயக்க முட்டுக்கட்டை போடுவதாக அதிருப்தி எழுந்துள்ளது.

திண்டுக்கல் - பொள்ளாச்சி - போத்தனுார் இடையேயான, 160 கி.மீ., ரயில் வழித்தடமானது, மதுரை ரயில்வே கோட்டத்தின்கீழ் இருந்தது. அதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு ஸ்டேஷன்கள் பாலக்காடு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் பல கோடி வருவாயை வாரி வழங்கி வந்தன.நீண்ட கால போராட்டங்களுக்கு பின், சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்கள் இக்கோட்ட கட்டுப்பாட்டுக்கு சென்றன. பொள்ளாச்சி - கிணத்துக்கடவு (21 கி.மீ.,) மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, பாலக்காடு கோட்டத்துக்கு தாரைவார்க்கப்பட்டது.

பொள்ளாச்சி, கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வளர்ச்சியை தடுக்கும் இம்மாற்றத்துக்கு, அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.இதன் விளைவாக, தற்போது புதிய ரயில்கள் இயக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக பாலக்காடு கோட்டத்தின்மீது கொங்கு மண்டல மக்களின் கோபம் திரும்பியுள்ளது.

ரயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடத்தில், திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி எல்லை வரை மதுரை கோட்டத்திலும், போத்தனுார் சேலம் கோட்டத்திலும் உள்ளது. இடைப்பட்ட, பொள்ளாச்சி - கிணத்துக்கடவு பாலக்காடு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.கோவையில் இருந்து இவ்வழித்தடத்தில் தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கத்தை அதிகரித்தால், கொங்கு மண்டலத்துக்கே வரப்பிரசாதமாக அமையும்.

மதுரை மற்றும் சேலம் கோட்டங்களில் இருந்து, இவ்வழித்தடத்திலும், இதர வழித்தடங்களிலும் புதிய, பழைய ரயில்களை இயக்குவது, கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற கருத்துருக்களை தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்படுகின்றன.கோவை போன்ற முக்கிய ஸ்டேஷன்களில் கிடைத்த வருவாயை கொண்டு கேரளாவுக்கு உட்பட்ட ஸ்டேஷன்கள், ரயில் வழித்தடங்களை பாலக்காடு கோட்டம் மேம்படுத்தி வளர்ச்சியும் கண்டது.

ஆனால், கோவை, திருப்பூர் பகுதிகள் சேலம் கோட்டத்துக்கு சென்றதால், வருவாயை இழந்த வஞ்சிப்பு டன், பாலக்காடு கோட்டம் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.மதுரை, சேலம் கோட்டங்களின்கருத்துருக்கள், தெற்கு ரயில்வேயில் இருந்து, ரயில்வே வாரியத்தின் பார்வைக்கு செல்வதில்லை என கூறப்படுகிறது. பிறகு எப்படி கோரிக்கைகள் நிறைவேறும். இதுபோன்று பல முட்டுக்கட்டைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாலக்காடு கோட்டம் போட்டு வருகிறது.இதற்கு, தெற்கு ரயில்வே நிர்வாகம் தீர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுவே நிரந்தர தீர்வு!

கோவை, போத்தனுார் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் விரிவுபடுத்தப்பட்ட பிளாட்பார்ம்கள், கோவை ரயில்வே பணிமனை என அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே, கோவையை தலைமையாக கொண்டு ஒரு ரயில்வே கோட்டத்தை புதிதாக உருவாக்கினால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கின்றனர் ரயில்வே ஆர்வலர்கள்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X