ஆம்னி பஸ் கவிழ்ந்தது வாலிபர் பரிதாப பலி

Added : ஆக 31, 2022 | |
Advertisement
திருச்சி:திருச்சி, மணிகண்டம் அருகே, 'ஆம்னி' பஸ் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்; 10 பேர் காயமடைந்தனர்.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மணிகண்டம் பகுதியில், பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனால், அந்த பகுதியை கடக்கும் வாகனங்கள், 'சர்வீஸ்' சாலையை பயன்படுத்தி வருகின்றன.இந்நிலையில், சென்னையில் இருந்து தென்காசிக்கு, 31 பயணியருடன் சென்று கொண்டிருந்த

திருச்சி:திருச்சி, மணிகண்டம் அருகே, 'ஆம்னி' பஸ் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்; 10 பேர் காயமடைந்தனர்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மணிகண்டம் பகுதியில், பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனால், அந்த பகுதியை கடக்கும் வாகனங்கள், 'சர்வீஸ்' சாலையை பயன்படுத்தி வருகின்றன.இந்நிலையில், சென்னையில் இருந்து தென்காசிக்கு, 31 பயணியருடன் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ், அதிவேகமாக சென்றதால், மணிகண்டம் பகுதியில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், தென்காசியைச் சேர்ந்த சக்திவேல், 19, என்பவர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மணிகண்டம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, கிரேன் உதவியுடன் பஸ்சை துாக்கி நிறுத்தி, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இடது கால் துண்டான நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல், சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து நடந்ததும், பஸ் டிரைவர் தப்பி ஓடினார்.விபத்து குறித்து, மணிகண்டம் போலீசார் வழக்கு பதிந்து, பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X