புதிய பி.ஓ.எஸ்., மிஷின் வழங்க வேண்டும்! ரேஷன் கடை பணியாளர் கோரிக்கை

Added : ஆக 31, 2022 | |
Advertisement
கிணத்துக்கடவு : 'ரேஷன் கடைகளுக்கும், பி.ஓ.எஸ்., மிஷின், எடை மேடை தராசு புதிதாக வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கோவை மாவட்ட, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் கிணத்துக்கடவு கிளை கூட்டம், சிக்கலாம்பாளையம் பெருமாள் கோவில் மண்டபத்தில் நடந்தது.மாநில தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் காளியப்பன் மற்றும்

கிணத்துக்கடவு : 'ரேஷன் கடைகளுக்கும், பி.ஓ.எஸ்., மிஷின், எடை மேடை தராசு புதிதாக வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் கிணத்துக்கடவு கிளை கூட்டம், சிக்கலாம்பாளையம் பெருமாள் கோவில் மண்டபத்தில் நடந்தது.மாநில தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் காளியப்பன் மற்றும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பொது வினியோகத்துக்கென தனித்துறை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும், பி.ஓ.எஸ்., மிஷின், எடை மேடை தராசு புதிதாக வழங்க வேண்டும்.போர்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 800 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கடையும், அளவையாளரும் நியமிக்க வேண்டும். தரமான மளிகை பொருட்கள் விற்பனை செய்யவும், விற்பனை குறியீடு என்பதை நிர்ணயம் செய்யக்கூடாது.

ஊதியம் மற்றும் பிற பணப்பயன்கள், ஏ.டி.எம்., வாயிலாக வழங்க வேண்டும். முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளை வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும்.அரசு விடுமுறை நாட்களை, ரேஷன் கடைகளுக்கும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும். கைரேகை பதிவாகாத கார்டுகளுக்கு தனி குறியீடு கொடுக்கப்பட வேண்டும்.

பி.ஓ.எஸ்., மிஷின் பழுதடைந்தால், உடனடியாக சர்வீஸ் இன்ஜினியர் நேரடியாக கடைக்கு வந்து பழுது நீக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பெரும்பாலும் பெண்கள் பணிபுரிவதால் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிணத்துக்கடவு கிளை தலைவர் பெருமாள்சாமி நன்றி தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X