விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

Added : ஆக 31, 2022 | |
Advertisement
வால்பாறை : கோட்டூர் குறுமைய அளவில் நடந்த வளைபந்து போட்டியில், மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள், கோட்டூர் குறுமைய அளவில், நடந்த வளைபந்து போட்டியில், அரவிந்த், அபினேஷ், கிருஷ்ணன், ஆதித்தியா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.இதே போல், இறகுபந்து போட்டி, கைபந்து போட்டிகளிலும் பள்ளி மாணவர்கள்
விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வால்பாறை : கோட்டூர் குறுமைய அளவில் நடந்த வளைபந்து போட்டியில், மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள், கோட்டூர் குறுமைய அளவில், நடந்த வளைபந்து போட்டியில், அரவிந்த், அபினேஷ், கிருஷ்ணன், ஆதித்தியா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.இதே போல், இறகுபந்து போட்டி, கைபந்து போட்டிகளிலும் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்குபெற உள்ளனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில், அவர்களுக்கு பள்ளி சார்பில், தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர்கள் ரெஜினா, ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X