சாலை விபத்தில் மகன் இறப்பு தந்தையிடம் இருந்து தாய்க்கு இழப்பீடு

Added : ஆக 31, 2022 | |
Advertisement
சென்னை:இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் தாய்க்கு, 5.35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், அந்த இழப்பீடு தொகையை, தந்தையிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன்; மனைவி முனியம்மாள். இவர்களுக்கு முருகன், 19, மாஸ்டர் மணிகண்டன், 14, என, இரண்டு மகன்கள். இருவரும்,

சென்னை:இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் தாய்க்கு, 5.35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், அந்த இழப்பீடு தொகையை, தந்தையிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன்; மனைவி முனியம்மாள். இவர்களுக்கு முருகன், 19, மாஸ்டர் மணிகண்டன், 14, என, இரண்டு மகன்கள். இருவரும், 2011 ஏப்., 28ல், தந்தையின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, வில்லிவாக்கம் புதிய ஆவடி சாலை அருகே சென்றனர். வண்டியை முருகன் ஓட்டினார்.
பின் இருக்கையில், மணிகண்டன் அமர்ந்திருந்தார்.ஆடு தொட்டி அருகே சென்றபோது, சாலையின் 'மீடியன்' மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த முருகனின் தம்பி மணிகண்டன் உயிரிழந்தார்.இந்த நிலையில், மகனின் இறப்புக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில், தாய் முனியம்மாள் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிபதி டி.சந்திரசேகரன் முன் நடந்தது.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு: இந்த வழக்கில், இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் தந்தை; குற்றம் புரிந்தவர் மூத்த மகன்; இழப்பீடு கோருபவர் மனைவி; இறந்த நபர் மற்றொரு மகன். விபத்தில் இறந்தவர் 'ஹெல்மெட்' அணியவில்லை. வாகனத்தை ஓட்டியவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை. அதிவேகம், அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியதே, விபத்துக்கு காரணம். ஹெல்மெட் அணியாததால், இழப்பீடு தொகையில் 59 ஆயிரத்து 500 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த வழக்கில் 'இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனமும், மனுதாரரின் கணவரும் இணைந்து, 5.35 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடாக, மனுதாரருக்கு வழங்க வேண்டும். பின், அந்த தொகையை, மனுதாரரின் கணவரிடம் இருந்து, சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் வசூலித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X