குரூப் - 1 தேர்வு மதிப்பெண் வெளியீடு| Dinamalar

'குரூப் - 1' தேர்வு மதிப்பெண் வெளியீடு

Added : ஆக 31, 2022 | |
சென்னை:'குரூப் - 1' தேர்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எழுந்த சர்ச்சையால், மதிப்பெண் விபரங்களை, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.அரசு துறைகளில் துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, குரூப் - 1 பதவிகளில், 66 காலியிடங்களை நிரப்ப, ௨௦௨௧ல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டது.இதில், 1.40 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் பிரதான தேர்வுக்கு தகுதி

சென்னை:'குரூப் - 1' தேர்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எழுந்த சர்ச்சையால், மதிப்பெண் விபரங்களை, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

அரசு துறைகளில் துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, குரூப் - 1 பதவிகளில், 66 காலியிடங்களை நிரப்ப, ௨௦௨௧ல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டது.இதில், 1.40 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்ற, 3,800 பேரின் விபரம் மட்டும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.


இந்த ஆண்டு மார்ச் 4, 5 மற்றும் 6ம் தேதி பிரதான தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலையில் வெளியாகின. இதில், 137 பேர் நேர்காணலுக்கு தேர்வாகி, ஜூலை 15ல் நேர்காணல் நடத்தி, அதே நாளில் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.பணி நியமனம் பெற்றவர்களில், 87 சதவீதம் பெண்கள். இதனால், தேர்வர்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.


பெண்களுக்கான இட ஒதுக்கீடு இரட்டிப்பாக வழங்கப்பட்டு உள்ளதாகவும், ஆண் தேர்வர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், குரூப் - 1 முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு ஆகிய இரண்டிலும் பங்கேற்ற அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் விபரங்களையும், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X