கோதவாடி குளத்தில் ஆய்வு; ஆக்கிரமிப்பு அகற்ற மனு

Added : ஆக 31, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : கிணத்துக்கடவு, கோதவாடி குளத்தில், மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கிணத்துக்கடவு அருகே, 152 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் உள்ளது. விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்கு பின், குளத்தின் நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பி.ஏ.பி., கால்வாய்களில்
கோதவாடி குளத்தில் ஆய்வு; ஆக்கிரமிப்பு அகற்ற மனு

பொள்ளாச்சி : கிணத்துக்கடவு, கோதவாடி குளத்தில், மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கிணத்துக்கடவு அருகே, 152 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் உள்ளது. விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்கு பின், குளத்தின் நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பி.ஏ.பி., கால்வாய்களில் இருந்து குளத்துக்கு நீர் திறக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், குளத்தின் ஒரு பகுதியில் கரை உடைந்துள்ளது.கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, கவுசிகா நீர் கரங்கள் மற்றும் விவசாயிகள், குளத்தை சீரமைக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணிகளை மத்திய 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட குழுவின் இயக்குனர் பாலாஜி, மாவட்ட கலெக்டர் சமீரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். குளத்தை மேம்படுத்துவதற்கு கரையை பலப்படுத்துதல் மற்றும் துார்வாருதல் பணியை பார்வையிட்டனர்.அப்போது விவசாயிகள், 'கோதவாடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், வடசித்துார் வருவாய் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன. 1912 - 1913 வரைபடத்தின் படி, ஒப்பிட்டு பார்த்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X