சிதம்பரம் பஸ் நிலையத்தில் குடிமகன்கள்...அடாவடி; தினசரி அச்சத்தில் மாணவியர், பெண்கள்

Added : ஆக 31, 2022 | |
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலைய நுழைவு வாயிலில் இயங்கும் இரு டாஸ்மாக் கடைகளால் குடி பிரியர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் பெண் பயணிகள் அச்சமடைகின்றனர்.கோவில் நகரமாக விளங்கும் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் அருகில் பிச்சாவரம் வன சுற்றுலா மையம்
சிதம்பரம் பஸ் நிலையத்தில் குடிமகன்கள்...அடாவடி;  தினசரி அச்சத்தில் மாணவியர், பெண்கள்


சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலைய நுழைவு வாயிலில் இயங்கும் இரு டாஸ்மாக் கடைகளால் குடி பிரியர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் பெண் பயணிகள் அச்சமடைகின்றனர்.கோவில் நகரமாக விளங்கும் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் அருகில் பிச்சாவரம் வன சுற்றுலா மையம் உள்ளது.

இதனால், தினமும் அதிக அளவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நகருக்கு வந்து செல்கின்றனர்.சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் நகரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் வெளியூர் மாணவ, மாணவியர், ஊழியர்கள் அதிக அளவில் பஸ் நிலையம் வருகின்றனர்.பஸ் நிலைய நுழைவு வாயிலிலேயே இரு டாஸ்மாக் பார்கள் இயங்குவதால், பஸ் நிலையம் வருபவர்கள் முகம் சுளிக்கின்றனர். சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக சிதம்பரம் பஸ் நிலைய நுழைவு வாயிலில் இரு டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு மது வாங்கி, பஸ் நிலையத்திலேயே அருந்தும் குடிமகன்களின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாலை நேரத்தில் குடி பிரியர்களின் கொட்டம் சற்றும் கூடுதலாகவே இருக்கும்.பல நேரத்தில் போதை மயக்கத்தில் குடிமகன்கள் சிலர் துணி இல்லாமல் நிர்வாணமாக கிடப்பதால், பொது மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

அண்ணா தெரு, கொத்தங்குடி தெரு, காந்தி வீதி, குமரன் தெரு மற்றும் மீதிக்குடி உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளுக்கு செல்லும் சாலை அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.குடிமகன்கள் சாலையோரம் நின்று மது குடிப்பதால், அப்பகுதிக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தட்டிக் கேட்டால் அவர்களிடம் குடிமகன்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், பஸ் நிலையம் வருவதற்கு மாணவிகள், பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அச்சமடைகின்றனர்.

இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி, பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.கோவில் நகரமான சிதம்பரத்தில் பஸ் நிலையம் அருகே பயணிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை கூட அகற்ற மாவட்ட நிர்வாகம் முன் வராதது, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பா.ஜ., மற்றும் பா.ம.க., வினர், பெரிய அளவில் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

24 மணி நேரமும் சரக்கு

சிதம்பரம் பஸ் நிலைய டாஸ்மாக் கடை, வழக்கமான நேரப்படி மூடப்பட்டாலும், இங்கு, 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கும். டாஸ்மாக் கடை எதிரிலேயே போலீஸ் பூத் இயங்கி வருகிறது. அதுபற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி போதை ஆசாமிகளுக்குள் மோதல் சம்பவங்கள் நடக்கிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X