அகில இந்திய கிரிக்கெட் பைனல்ஒய்.எஸ்.சி.ஏ., - அப்பல்லோ டிரா| Dinamalar

அகில இந்திய கிரிக்கெட் பைனல்ஒய்.எஸ்.சி.ஏ., - அப்பல்லோ 'டிரா'

Added : ஆக 31, 2022 | |
சென்னை, அகில இந்திய 'லீக் கம் நாக் - அவுட்' கிரிக்கெட் இறுதிப் போட்டி டிராவில் முடிந்தது. அப்பல்லோ டயர்ஸ் மற்றும் ஒய்.எஸ்.சி.ஏ., அணிகள் கோப்பையை பகிர்ந்துக் கொண்டன.தி.நகரில் உள்ள, 'யங் ஸ்டார்ஸ்' கிரிக்கெட் அகாடமி சார்பில், அகில இந்திய கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடந்தது.இப்போடியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அணிகள் உட்பட நாடு முழுதும் இருந்து அகாடமி, கிளப் என
அகில இந்திய கிரிக்கெட் பைனல்ஒய்.எஸ்.சி.ஏ., - அப்பல்லோ 'டிரா'

சென்னை, அகில இந்திய 'லீக் கம் நாக் - அவுட்' கிரிக்கெட் இறுதிப் போட்டி டிராவில் முடிந்தது. அப்பல்லோ டயர்ஸ் மற்றும் ஒய்.எஸ்.சி.ஏ., அணிகள் கோப்பையை பகிர்ந்துக் கொண்டன.தி.நகரில் உள்ள, 'யங் ஸ்டார்ஸ்' கிரிக்கெட் அகாடமி சார்பில், அகில இந்திய கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடந்தது.இப்போடியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அணிகள் உட்பட நாடு முழுதும் இருந்து அகாடமி, கிளப் என மொத்தம் 44 அணிகள் பங்கேற்றன.இதில், அப்பல்லோ டயர்ஸ் மற்றும் ஒய்.எஸ்.சி.ஏ., என்கிற 'யங் ஸ்டார்ஸ்' கிரிக்கெட் அகாடமி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றன.மழை காரணமாக, இறுதிப்போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில், முதலில் பேட் செய்த, அப்பல்லோ டயர்ஸ் அணி, 15 ஓவர்களில் ஆறு விக்கெட் இழந்து, 109 ரன்கள் குவித்தது.அந்த அணி வீரர் அபிநாத் 41 பந்துகளில், ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய, ஒய்.எஸ்.சி.ஏ., அணி, 15 ஓவர்களில் ஆறு விக்கெட் மட்டும் இழந்து, 109 ரன்கள் எடுத்தது.இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. விறுவிறுப்பான ஆட்டத்தில் தோல்வியில் இருந்து ஒய்.எஸ்.சி.ஏ., அணியை, அந்த அணி வீரர் பொன்னரசு மீட்டார்.அவர், 44 பந்துகளில் 2 சிக்சர் உட்பட 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதையடுத்து, இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X