குடிநீர் வாரிய இடத்தில் மண் திருட்டுநடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம்

Added : ஆக 31, 2022 | |
Advertisement
சென்னை, பெசன்ட் நகரில், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து, சட்டவிரோதமாக மண் திருடியவர்களை போலீசில் பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், குடிநீர் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட் நகர் 4வது குறுக்கு தெருவில், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான, 7,500 சதுர அடியில் இடம் உள்ளது.இதில், மூன்று கிணறு வெட்டி, பெசன்ட்
குடிநீர் வாரிய இடத்தில் மண் திருட்டுநடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம்

சென்னை, பெசன்ட் நகரில், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து, சட்டவிரோதமாக மண் திருடியவர்களை போலீசில் பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், குடிநீர் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட் நகர் 4வது குறுக்கு தெருவில், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான, 7,500 சதுர அடியில் இடம் உள்ளது.இதில், மூன்று கிணறு வெட்டி, பெசன்ட் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, ஏரி நீர் மற்றும் கடல்நீரை குடிநீராக்கி வினியோகம் செய்வதால், 10 ஆண்டுகளாக கிணறு பயன்படாமல் உள்ளது.சுற்றி தடுப்பு சுவர் கட்டி, நுழைவு வாயிலில் இரும்பு கதவு அமைத்து பூட்டி வைத்து இடம் பாதுகாக்கப்பட்டது. தற்போது, அடையாறு, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதியில், வடிகால் கட்ட பள்ளம் தோண்டப்படுகிறது.அதில் எடுக்கும் மண், இந்த இடத்தில் கொட்டி, தேவைக்கு ஏற்ப அள்ளி செல்லப்படும்.இதற்காக மட்டும் குடிநீர் வாரியம், மாநகராட்சி ஒப்பந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அங்குள்ள மரம், இதர பொருட்களை சேதப்படுத்தக் கூடாது, பள்ளம் தோண்டி மண் எடுக்கக்கூடாது என, நிபந்தனை விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், இதற்கு மாறாக, கொட்டிய மண்ணை வெளியேற்றியதுடன், ஜே.சி.பி., இயந்திரத்தால் நிலத்தில் உள்ள புது மண்ணும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது.இரவு, பகலாக, மூன்று இடங்களில், 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி, 60க்கும் மேற்பட்ட லாரிகளில் சட்டவிரோதமாக மண் திருடப்பட்டு உள்ளது.இது குடிநீர் வாரிய ஊழியர்களின் திடீர் ஆய்வில், சட்டவிரோதமாக மண் திருடி விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து, புகாரின்படி நேற்று முன்தினம், சாஸ்திரி நகர் போலீசார், ஜே.சி.பி., இயந்திரம், அதன் ஓட்டுனரை பிடித்து சென்றனர்.சில நிமிடத்தில், கட்சிக்காரர்கள் சிலர் தலையிட்டு, வாகனத்தையும், ஓட்டுனரையும் அழைத்து சென்றுள்ளனர். இதனால், குடிநீர் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று, மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.நம்பிக்கை அடிப்படையில் தான், மண்ணை கொட்ட அனுமதி வழங்கினோம். திடீரென ஆய்வு செய்தபோது தான், நீரூற்று வரும் அளவுக்கு பள்ளங்கள் தோண்டி, சட்டவிரோதமாக மண் எடுத்து செல்வது தெரிந்தது. போலீசாரிடம் புகார் அளித்தும் பயனில்லை. பின், மண் எடுத்த தடம் தெரியாமல், அங்கு கொட்டிய மண்ணை கொண்டு பள்ளத்தை மூடினர். மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் உத்தரவுக்கு பின், சட்டவிரோத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிநீர் வாரிய அதிகாரிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X